சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 5தக்காளி
  2. 3 டீஸ்பூன்சமையல் எண்ணெய்
  3. 1/2 டீஸ்பூன்கடுகு உளுத்தம்பருப்பு
  4. 1/2 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  5. 1/2 மூடிதேங்காய்
  6. 50 கிராம்பொட்டுக்கடலை
  7. 1 டீஸ்பூன்சீரகம், சோம்பு,மிளகு
  8. 2வர மிளகாய்
  9. 1 பீஸ்பட்டை அன்னாசி மொக்கு
  10. தேவையான அளவுகறிவேப்பிலை, உப்பு
  11. 2பச்சை மிளகாய்
  12. 4பூண்டு பற்கள்
  13. 2பெரிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் தக்காளி சாம்பார் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் பட்டை, சோம்பு,சீரகம்,
    மிளகு,வரமிளகாய்,
    தக்காளி, பூண்டு,தேங்காய் பொட்டுக்கடலை அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    தண்ணீர் ஊற்றி நன்கு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக விடவும்.

  4. 4

    கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடலைப்பருப்பு,பட்டை, அன்னாசி மொக்கு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பின் அதனுடன் உப்பையும் சேர்த்து அனைத்தையும் நன்கு வதக்கி விட வேண்டும். அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.

  7. 7

    அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

  8. 8

    தக்காளி சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். பின் மூடியை நீக்கி பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லி இலைகளை தூவி சாம்பாரை இறக்கவும்.

  9. 9

    நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👌👌👌 இந்த தக்காளி சாம்பார் இட்லிக்கு செம்ம பொருத்தமாக இருக்கும்👍 வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍நன்றி😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
அன்று

Similar Recipes