பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#COLOURS2

பொதுவாக வெயில் காலத்தில் பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்வதால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்

பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

#COLOURS2

பொதுவாக வெயில் காலத்தில் பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்வதால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 1 கப் பொன்னாங்கண்ணிக் கீரை
  2. 1/4 கிலோ பாசிப்பருப்பு
  3. 1 தக்காளி
  4. 2 பெரிய வெங்காயம்
  5. 1 பச்சை மிளகாய்
  6. ஒரு ஸ்பூன் சீரக தூள்
  7. தேவையான அளவு உப்பு
  8. தேவையான அளவு தண்ணீர்
  9. தேவையான அளவு எண்ணெய்
  10. ஒரு ஸ்பூன் கடுகு
  11. ஒரு ஸ்பூன் உளுந்து

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    தேவையான பொருளை எடுத்துக் கொண்டு1/4 கிலோ பாசிப்பருப்பை தண்ணீரில் கழுவி எடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 விசில் வைக்கவும்.

  2. 2

    விசில் அடங்கியதும் அந்த பாசிப்பருப்பை ஒரு கடாயில் ஊற்றி தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பருப்புடன் சேர்க்கவும். பின் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்., சேர்த்து வேக வைக்கவும்.

  3. 3

    தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் சீரகத் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து, தாளித்து கொதித்த கீரையில் கொட்டவும். அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். சுவையான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு ரெடி.🌿🌿🌿🌿

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes