தேவையான பொருட்கள்

  1. தேவையான பொருட்கள்:
  2. 6 முட்டை - (வேக வைத்தது)
  3. 1வெங்காயம் - (பொடியாக நறுக்கியது)
  4. 2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. 2பச்சை மிளகாய்
  6. 1/4 கப்துருவிய தேங்காய்
  7. 1 டீஸ்பூன்சோம்பு
  8. 1/2 டீஸ்பூன்கசகசா
  9. சிறிதுகொத்தமல்லி
  10. தேவையான அளவுஉப்பு - சுவைக்கேற்ப
  11. 2 1/2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  12. வதக்கி அரைப்பதற்கு:
  13. 2வெங்காயம் - (நறுக்கியது)
  14. 2தக்காளி - (நறுக்கியது)
  15. 1புதினா - கையளவு
  16. 1கொத்தமல்லி - கையளவு
  17. 5பச்சை மிளகாய்
  18. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  19. 2 டீஸ்பூன்மல்லித் தூள்
  20. 1/4 டீஸ்பூன்கரம் மசாலா
  21. ஒரு சிட்டிகைமஞ்சள் தூள்
  22. தாளிப்பதற்கு:
  23. 5கிராம்பு
  24. 1 இன்ச்பட்டை
  25. 2அன்னாசிப்பூ
  26. 1பிரியாணி இலை
  27. 1/4 டீஸ்பூன்சோம்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் புதினா, கொத்தமல்லி, தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

  2. 2

    பின்பு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, பின் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    அடுத்து மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு மற்றும் கசகசாவை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

  5. 5

    பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதைத் தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

  6. 6

    அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, பின் 2 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் 6-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

  7. 7

    பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் 4-5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

  8. 8

    இறுதியாக வேக வைத்துள்ள முட்டைகளை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியை மேலே தூவி இறக்கினால், முட்டை சால்னா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavithra
Pavithra @pavithrasuresh
அன்று
Chennai

Similar Recipes