ஹைதராபாத் பேபிகார்ன் ஃப்ரை

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

ஹைதராபாத் பேபிகார்ன் ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 200 கிராம் பேபி கார்ன்
  2. 50 கிராம் கான்பிளார் மாவு
  3. 3 ஸ்பூன் தயிர்
  4. 2 பெரிய வெங்காயம்
  5. 2 வரமிளகாய்
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1/2 கப் குருமா
  9. தேவையான அளவு உப்பு
  10. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பேபி கார்னை நீளவாக்கில் கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் மாவு,தயிர், கால் ஸ்பூன் உப்பு போட்டு தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிசைந்த மாவில் நறுக்கி வைத்த பேபி கார்ன் துண்டுகளை அதில் போட்டு பிரட்டி வைத்து கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிரட்டி வைத்த பேபிகான் துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

  5. 5

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம்,1/4 ஸ்பூன் உப்பு போட்டு வதக்கவும்.பிறகு பொரித்து வைத்த பேபி கார்ன் துண்டுகளை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

  6. 6

    பிறகு அதில் மிளகாய் தூள்,கரம்மசாலா தூள், 1/4 ஸ்பூன் உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதில் குருமாவை ஊற்றி இரண்டு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.

  7. 7

    நன்றாக கிளறிய பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes