ஷக் ஷூகா

Sharath
Sharath @Sharath

#keerskitchen
முட்டையை வைத்து சுலபமாக செய்ய கூடிய இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு உணவு

ஷக் ஷூகா

#keerskitchen
முட்டையை வைத்து சுலபமாக செய்ய கூடிய இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1- வெங்காயம்
  2. 1 - குடை மிளகாய்
  3. 2 டேபிள் ஸ்பூன் - தக்காளி சாஸ்
  4. 2 - பூண்டு
  5. 1 - பச்சை மிளகாய்
  6. 1/2 டீஸ்பூன் - ஜீரகம்
  7. 1 டீஸ்பூன் - ஜீரக தூள்
  8. 1 டீஸ்பூன் - மிளகாய் தூள்
  9. 2 - பெரிய தக்காளி
  10. 3 - பெரிய முட்டைகள்
  11. 2 டீஸ்பூன் - வெண்ணெய்
  12. உப்பு மற்றும் மிளகு - சுவைக்கேற்ப
  13. சிறிதளவுகொத்தமல்லி இலை -

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சூடாக்கவும். அதில் சீரகம், நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

  2. 2

    பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கிய பின் உப்பு, ஜீரக தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்

  3. 3

    தக்காளி சாஸ் சேர்க்கவும். தேவைகேற்ப சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். பெரிய கரண்டியால் சாஸில் சிறிய கிணறுகளை உருவாக்கி ஒவ்வொரு கிணற்றிலும் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

  4. 4

    பாத்திரத்தை மூடி 5-8 நிமிடங்கள் சமைக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

  5. 5

    பிரட் / ரொட்டி / சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharath
Sharath @Sharath
அன்று

Similar Recipes