புதினா & கொத்தமல்லி இலை துவையல்

Shanthi
Shanthi @Shanthi007

@Shanthi007 என் பாட்டி காலத்து சட்னி.இது உடம்புக்கு ரொம்ப நல்லது. பித்த மயக்கத்தில் இருந்தாள் இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. தலா 1 கட்டு புதினா, கொத்தமல்லி
  2. சிறிய துண்டு இஞ்சி
  3. 10 நம்பர் மிளகாய் வத்தல்
  4. 2 கொத்து கறிவேப்பிலை
  5. 1 ஸ்பூன் பெருங்காயம்
  6. சிறிய புளி - நெல்லிக்காய் அளவு
  7. தேவையான அளவு தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்
  8. 100 மிந. எண்ணெய்
  9. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    புதினா, மல்லித்தழை இரண்டையும் சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தல் போட்டு வறுத்து எடுக்கவும். புதினாவை போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.மல்லி இலையை வதக்க கூடாது.

  2. 2

    ஆறியதும் மிக்ஸியில் புளி, இஞ்சி, மிளகாய் வத்தல், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் புதினா கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்து மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.10 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். சுவையான ஆரோக்கியமான புதினா & கொத்தமல்லி இலை துவையல் ரெடி.

  4. 4

    சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி கூட சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes