ஸ்பெஷல்(பட்டர்) ரவா ரோஸ்ட்,கெட்டி சட்னி/ rava roast recipe in ta

#vattaram
ரவா தோசையில் என்ன ஸ்பெஷல் என்றால், ரவா தோசை முழுக்க பட்டர் தடவி நல்லா மொறு மொறு-னு செய்றாங்க.
திருச்சியில், "ஆதிகுடி காபி கிளப்" என்ற ஹோட்டல் 90 வருட பழமையானது. இந்த ஹோட்டலில், நெய் ரவா பொங்கல், சாம்பார் வடை,நெய் தோசை என எல்லாமே ஸ்பெஷல் தான்.மேலும், இந்த ஹோட்டலின் ஸ்பெஷலே 'ஸ்பெஷல் ரவா ரோஸ்ட் 'தான்.
சமையல் குறிப்புகள்
- 1
ரவா தோசைக்கு ரவை, அரிசிமாவு, மைதா மாவு, உப்பு இவற்றை 1 கப் ரவைக்கு 4 டம்ளர் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி குறைந்தது 20 நிமிடங்கள் ஊற விடவும்.
- 2
ஊறிய பிறகு, மிளகு சீரகம், நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
தோசை ஊற்றுவதற்கு முன்னால் 1 ஸ்பூன் ரவை (சேர்த்தால் அங்கங்கு உருண்டை உருண்டையாக ரவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்) மற்றும் 1டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
- 3
இந்த மாவு மிகமிக தண்ணியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தவாவில் ஊற்றும் போது நன்றாக மொறுமொறுப்பாக கிடைக்கும்.
- 4
ஒவ்வொரு முறை தோசை ஊற்றும்போது நன்றாக அடியிலிருந்து மாவை கலக்கி விடவும். ஆனால் மேலிருந்து தண்ணியாக உள்ள மாவை கரண்டியில் எடுத்து ஊற்ற வேண்டும்.
- 5
இனி தவாவில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் மீடியம் தீயில் வைத்து தோசை ஊற்றி வெந்ததும் எடுக்கலாம்.
- 6
இங்கு ஸ்பெஷலே மாவு ஊற்றியதும் ஒரு ஸ்பூன் அளவிற்கு பட்டர் சேர்த்து தோசை முழுவதும் பரப்பி நன்றாக மொறுமொறுப்பாக வரும் வரை பொறுத்து, தோசை எடுக்க வேண்டும்.
- 7
அவ்வளவுதான். சுவையான பட்டர் ரவா தோசை அதாவது ஸ்பெஷல் ரவா ரோஸ்ட் ரெடி.
- 8
தேங்காய் கெட்டி சட்னி:
ஒரு மிக்ஸி ஜாரில், தேங்காய், பொட்டுகடலை, மிளகாய், இஞ்சித் துண்டு,கறிவேப்பிலை சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைக்க வேண்டும்.
- 9
அரைத்த விழுதுடன், குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். உப்பு சரி பார்க்கவும்.
- 10
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய், விருப்பப்பட்டால் ஒரு சின்ன வெங்காயம் நறுக்கி சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும்.
- 11
அவ்வளவுதான். சுவையான தேங்காய் கெட்டி சட்னி சட்னி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு ரவா ரோஸ்ட்(Pepper paper Rava Roast)


ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)


கர்நாடகா உடனடி ரவா தோசை


ரவா தோசை(rava dosa)#GA4/week 25/


நெய் ரோஸ்ட்/தேங்காய் சட்னி


ரவா தோசை


வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)


ரவா பொங்கல்


கிரிஸ்பி ரவா தோசை


ரவா பொங்கல்


ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)


ரவா தோசை # கர்நாடகா


கர்நாடகா ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி (Rava idli recipe in tamil)


ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)


ரவா மசாலா தோசை


இஞ்சி தோசை


கோதுமை ரவா ரோஸ்ட் (Kothumai rava roast recipe in tamil)


கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji


ரவா தோசை


கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி


ரவா தோசை(rava dosai recipe in tamil)


இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)


காலிஃப்ளவர் தக்காளி ரோஸ்ட்...😊🍅(cauliflower tomato roast recipe in tamil)


ரவா தோசை(rava dosa recipe in tamil)


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)


ரவா இட்லி(rava idli recipe in tamil)


டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)


பட்டர் ரோஸ்ட் (Butter roast recipe in tamil)


ஸ்பெஷல் ரவாலாடு(rava laddu recipe in tamil)


ரவா பணியாரம் (rava ppaniyaram Recipe in Tamil)

கமெண்ட்