கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#carrot #goldenapron3 #book.
இந்த செய்முறை படி ரவா தோசை செய்தால் மிகவும் ருசியாகவும், மொறுமொறுவென்று இருக்கும். மேலும் ஹோட்டல் ரவா தோசையை விட மிக அதிக சுவையாக இருக்கும்.இதற்காக ஹோட்டல் சென்று ரவா தோசை தேட வேண்டியது இல்லை.
டிப்ஸ்: 1.ரவை , அரிசி மாவை விட பாதிப்பங்கு மைதா சேர்க்கவேண்டும்.
2.ரவை, அரிசிமாவு மற்றும் மைதா மாவை வாணலியில் நன்கு சூடேற்றி வறுத்து கொண்டால் தண்ணீர் விட்டு கரைக்கும் போது மிக எளிதாக கட்டியே கட்டாமல் கரைந்துவிடும். பச்சை வாசமும் இருக்காது.
3.வறுத்த மூன்று மாவையும் மிக்ஸியில் நன்கு ஒட்டிக் கொண்டால் தோசை ஊற்றும்போது மொறுமொறுப்பாக வரும்.
4.மேலும் தோசை ஊற்றும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் ஹோட்டலில் சுடுவது போல்போல் ஆங்காங்கே ஓட்டை உடன் வரும்.
5.ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்த்துக் கொண்டால் தோசை சிவக்க வரும்.
6.முந்திரிப்பருப்பு சேர்த்துக்கொண்டால் இன்னும் ரிச்சாக இருக்கும்.
7.நெய் சேர்த்து கொண்டால் மொறு மொறுப்பு அதிகமாவது இல்லாமல் வாசமாகவும் சுவை கூடுதல் ஆகவும் இறுக்கும்.
8. கூடுதலான அளவில் மாவை வறுத்து அரைத்து வைத்துக் கொண்டால், எப்போது வேண்டுமானாலும் இந்த கலவையை ஊறவைத்து, தோசை ஊற்றி கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

Preparation time 20 minutes
10  தோசை
  1. ஒரு கப் ரவை
  2. ஒரு கப் அரிசி மாவு
  3. அரைக் கப் மைதா மாவு
  4. ஒரு கேரட் பொடியாக அரிந்தது
  5. ஒரு பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது
  6. ஒரு பச்சை மிளகாய் பொடியாக அரிந்தது
  7. ஒரு ஸ்பூன் சீரகம்
  8. ஒரு ஸ்பூன் மிளகு
  9. நைஸ் உப்பு தேவையான அளவு
  10. ரெண்டு ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி தழை
  11. 2 ஸ்பூன் கருவேப்பிலை
  12. ஒரு சிட்டிகை சமையல் சோடா
  13. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  14. தோசை ஊத்த தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

Preparation time 20 minutes
  1. 1

    முதலில் ஒரு கப் ரவை, ஒரு கப் அரிசி மாவு, அரை கப் மைதா மூன்றையும் சேர்த்து ஒரு வாணலியில் நன்கு சூடேறும் வரை வறுத்துக்கொள்ளவும். கொஞ்சம் சூடு ஆறியவுடன் மிக்ஸியில் இவற்றை நன்றாக இரண்டு நிமிடம் அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் அரைத்த உடன் மாவை உடனே தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். ஏனென்றால் மாவு சூடாக இருக்கும் பொழுதே கரைத்து கொண்டால், மிக சுலபமாக கட்டிகள் இல்லாமல் கரைந்துவிடும். பிறகு ஒரு கேரட், ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் இவை மூன்றையும் பொடியாக அறிந்து கொள்ளவும். கேரட்டை மிகப் பொடியாக அறிந்து கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லி இரண்டையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். மாவை குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறவைக்கவும். ரவை ஊற ஊற கெட்டியாகி விடும்.

  3. 3

    அதனால் காய்கறிகள் சேர்க்கும் பொழுது மீண்டும் தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.ரவை ஊறியவுடன் பொடியாக அரிந்த கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை,கொத்தமல்லி,சீரகம் மிளகு இவை யாவற்றையும் சேர்த்து கலக்கி விடவும். வெங்காயம் அரிந்தவுடன் நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்பொழுது வெங்காயம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் தனித்தனியாக இருக்கும்.

  4. 4

    தோசை ஊற்றும்போது ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்க்கவும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறியவுடன் மாவை நடுவில் இருந்து ஊற்றாமல், தோசை கல்லின் ஓரத்திலிருந்து வட்டமாக பரவலாக கரண்டி கொஞ்சம் உயர்த்தி பிடித்து ஊற்றவும். இப்படி ஊற்றுவதால் தோசை மிகவும் மெலிதாக ஓட்டை ஓட்டையாக வரும். ஒவ்வொரு தோசை ஊற்றும் போதும் மாவை நன்றாக கலந்து கலந்து ஊற்றவும். இல்லையென்றால் ரவை அடியில் வெட்டியாக நின்றுவிடும்.

  5. 5

    தோசை ஊற்றி எண்ணெய் விட்டவுடன் ஒரு மூடி போட்டு மூன்று நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பிப் போடத் தேவையில்லை.

  6. 6

    இப்போது சூடான சுவையான மொறுமொறுப்பான கேரட் ஆனியன் ரவா தோசை ரெடி. சட்னி-சாம்பார் அல்லது புளி சட்னி வகைகள் சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes