தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 வாழைத்தண்டு
  2. 100 கிராம் கடலை பருப்பு
  3. 50 கிராம் பாசிப்பருப்பு
  4. 50 கிராம் துவரம் பருப்பு
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. 2 பச்சை ‌மிளகாய்
  8. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1 ஸ்பூன் மல்லி தூள்
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 2 ஸ்பூன் சாம்பார் தூள்
  12. சிறிதளவுகருவேப்பிலை
  13. சிறிதளவு கொத்தமல்லி
  14. 1 ஸ்பூன் சோம்பு
  15. 1 ஸ்பூன் சீரகம் தூள்
  16. 1/2 ஸ்பூன் கடுகு
  17. 1/2 ஸ்பூன் வெள்ளை உளுந்து
  18. 25 மில்லி ஸஎண்ணெய்
  19. 1/4 ஸ்பூன் பெருங்காயம்
  20. தேவையான அளவுகல் உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் வாழைத்தண்டை நார் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரிசி கழுவிய தண்ணீரில் சேர்த்து கழுவி எடுக்கவும்

  2. 2

    பிறகு குக்கரில் கடலை பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, தண்ணீர் சேர்த்து கழுவி எடுக்கவும் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கவும்

  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பச்சை ‌மிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், கல் உப்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  5. 5

    பிறகு வதங்கியதும் அதில் வாழைத்தண்டு சேர்த்து வதக்கவும் பிறகு வதங்கியதும் அதில் வேக வைத்துள்ள பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்

  6. 6

    பிறகு அதில் சோம்பு தூள், பெருங்காயம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் பிறகு அதில் கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்

  7. 7

    இப்பொழுது சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes