எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
4 பேர்
  1. 2சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  2. 100 கிராம் வெல்லம்
  3. 1கப் தேங்காய் துருவல்
  4. 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  5. 1டீஸ்பூன் உப்பு
  6. 1 கப் மைதா மாவு
  7. 1சிட்டிகை உப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    சர்க்கரை வள்ளிக்கிழங்குயை முதலில் தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் இதனை இட்லி தட்டில் வைத்து ஆவி காட்டி, வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பின் வேகவைத்த கிழங்குகளை ஆறவிட்டு, நன்கு மசித்து கொள்ளவும். பின் தேங்காயை துருவி கொள்ளவும். பின் வெல்லத்தை கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில் தேங்காய் துருவல் சேர்த்து, தேங்காய் துருவல் மூழ்கும் அளவுக்கு, வெல்லம் சேர்த்து, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கெட்டியாக கிளறவும். பின் இதனை கிழங்குடன் சேர்த்து நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  4. 4

    வேறொரு பாத்திரத்தில், மைதா மாவை, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும். பின் ஏற்கனவே உருட்டிய உருண்டைகளை மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  5. 5

    தீயை அதிகமாக இருக்கும் போது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக சேர்த்து பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes