இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு

Shanthi
Shanthi @Shanthi007

#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு

#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 2 கப்இடியாப்பம் செய்ய : பச்சை அரிசி மாவு
  2. தேவையான அளவுஉப்பு
  3. 2 ஸ்பூன்நெய்
  4. 2 கப்கொதிக்க வைத்த தண்ணீர்
  5. 4 நம்பர்தக்காளி 🍅 குழம்பு செய்ய: தக்காளி 🍅
  6. 10 நம்பர்சின்ன வெங்காயம்
  7. 2 நம்பர்பச்சை மிளகாய்
  8. 2 ஸ்பூன்சாம்பார் பொடி
  9. தேவையான அளவுஉப்பு
  10. தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
  11. தேவையான அளவுஎண்ணெய்
  12. தேவையான அளவுதண்ணீர்
  13. 1/4 மூடிதேங்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இடியாப்பம் செய்ய தண்ணீர் இரண்டு கப் அளவு எடுத்து கொதிக்க வைத்து பாத்திரத்தில் மாவை சேர்த்து நெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி அந்த மாவை இடியாப்ப கட்டையில் வைத்து இட்லி தட்டில் பிழிந்து அதை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். சுவையான இடியாப்பம் தயார்.

  2. 2

    தக்காளி 🍅 மை கட் செய்து சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் தக்காளி கரைசலை ஊற்றி சாம்பார் பொடி இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் தேங்காய்யை மிக்ஸியில் அரைத்து ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும்.

  4. 4

    சுவையான ஆரோக்கியமான தக்காளி 🍅 குழம்பு ரெடி

  5. 5

    மிகவும் சுவையாக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes