பன் பரோட்டா & M. T. சால்னா / Bun poratto & Empty salna reciep in tamil

Shanthi
Shanthi @Shanthi007

#veg மதுரையில் சிறந்த உணவு. செய்வது மிகவும் எளிது. சுவை அதிகம்.

பன் பரோட்டா & M. T. சால்னா / Bun poratto & Empty salna reciep in tamil

#veg மதுரையில் சிறந்த உணவு. செய்வது மிகவும் எளிது. சுவை அதிகம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்கள்
  1. 1 கிலோமைதா மாவு
  2. தேவையான அளவுஉப்பு
  3. 2 ஸ்பூன்சர்க்கரை
  4. 1/4 ஸ்பூன்ஆப்ப சோடா
  5. தேவையான அளவுஎண்ணெய்
  6. தேவையான அளவுதண்ணீர்
  7. 2சால்னா செய்ய : வெங்காயம்
  8. 2தக்காளி 🍅
  9. சிறிது அளவுஇஞ்சி & பூண்டு விழுது
  10. 2பச்சை மிளகாய்
  11. 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  12. 11/2 - ஸ்பூன்மல்லி தூள்
  13. 1/2 ஸ்பூன்மஞ்சள்தூள்
  14. 1 ஸ்பூன்சிக்கன் மசாலா
  15. 1/2 மூடிதேங்காய்
  16. தேவையான அளவுபட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலை
  17. தேவையான அளவுஎண்ணெய்
  18. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மைதா மாவில் உப்பு, தண்ணீர்,ஆப்ப சோடா, சர்க்கரை சேர்த்து பிசைந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். மாவை உருண்டை வடிவில் செய்து ஊற வைக்கவும். சப்பாத்தி செய்து அதை விசிறி பரோட்டா செய்து தோசைக்கு கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொறித்து எடுக்கவும்.

  2. 2

    சுவையான பரோட்டா ரெடி

  3. 3

    சால்னா செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலை போட்டு அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி 🍅 மை மிக்ஸியில் அரைத்து ஊற்றி நன்கு வதக்கவும்.

  4. 4

    அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். தேங்காய் மை மிக்ஸியில் அரைத்து ஊற்றி ஊற்றி தண்ணீர் ஊற்றி அதில் உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

  5. 5

    நன்றாக கொதிக்க வைத்து அதில் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.சுவையான சால்னா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes