எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 மணி நேரம்
6 பரிமாறுவது
  1. பரோட்டா செய்ய:
  2. 1 கிலோ மைதா
  3. 1 ஸ்பூன் உப்பு
  4. 3/4 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 2 ஸ்பூன் சர்க்கரை
  6. 50 மில்லி வனஸ்பதி
  7. 100 மில்லி எண்ணெய்
  8. 200 மில்லி இளஞ்சூடான பால்
  9. கொத்து பரோட்டா செய்ய:
  10. 3 பரோட்டா
  11. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  12. 1பெரிய வெங்காயம் பெரிய துண்டுகளாக நறுக்கவும்
  13. 1/2குடைமிளகாய் பெரிய துண்டுகளாக நறுக்கவும்
  14. 2தக்காளி பெரிய துண்டுகளாக நறுக்கவும்
  15. 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
  16. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  17. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  18. 1/4 ஸ்பூன் சீரகத்தூள்
  19. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  20. 1_1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  21. உப்பு தேவையான அளவு
  22. 1/2 கப் சால்னா
  23. சில்லி பரோட்டா செய்ய:
  24. 3 பரோட்டா
  25. 1பெரிய வெங்காயம் பெரிய துண்டுகளாக நறுக்கவும்
  26. 1/2குடைமிளகாய் பெரிய துண்டுகளாக நறுக்கவும்
  27. 2தக்காளி பெரிய துண்டுகளாக நறுக்கவும்
  28. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  29. 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
  30. 1/8 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  31. 1/4 ஸ்பூன் சீரகத்தூள்
  32. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  33. 1_1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  34. 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  35. 2 ஸ்பூன் தக்காளி சாஸ்
  36. 1/4 ஸ்பூன் சோயா சாஸ்
  37. உப்பு தேவையான அளவு
  38. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

3 மணி நேரம்
  1. 1

    பரோட்டா செய்ய மாவுடன் உப்பு சர்க்கரை பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் வெதுவெதுப்பான பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் வனஸ்பதி சேர்த்து நன்கு அடித்து பிசைந்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் மீண்டும் நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மீண்டும் வனஸ்பதி ஆயில் கலந்து தடவி மீண்டும் மூடி வைத்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

    பின் சிறிது வரமாவை தூவி மாவை மிகவும் மெலிதாக தேய்த்து முடிந்த வரை அடுப்பு மேடையில் தப்பவும் நன்கு கர்ஷிப் போல் வர வேண்டும் பின் விரல்கள் கொண்டு சுற்றவும் பின் மீண்டும் வனஸ்பதி ஆயில் கலந்த கலவையை தடவி பதினைந்து நிமிடம் வரை நன்றாக ஊறவிடவும்
    பின் லேயர் மேல் அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக தட்டவும் பின் சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு மெல்லிய தீயில் வைத்து நிதானமாக சுட்டெடுக்கவும்

  3. 3

    கொத்து பரோட்டா: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள் சீரகத்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போக வதக்கவும்

    கட்செய்த பரோட்டா சேர்த்து கிளறவும் இறுதியாக சால்னா சேர்த்து தோசைக்கரண்டியால் நன்றாக கொத்தி விட்டு இறக்கவும்

  4. 4

    சில்லி பரோட்டா செய்ய:

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள் சீரகத்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்

    சில்லி சாஸ் தக்காளி சாஸ் சோயா சாஸ் சேர்த்து கிளறவும் கட் செய்த பரோட்டா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

  5. 5

    சுவையான வித்தியாசமான பரோட்டாக்கள் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes