எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 150 கிராம்- ஊறவைத்த கொண்டைக்கடலை
  2. 1/4 கிலோ-பாஸ்மதி அரிசி
  3. 2 டீஸ்பூன் -‌ கடலை எண்ணெய்
  4. 1 டீஸ்பூன்- நெய்
  5. 10- முந்திரி
  6. 2- ஏலக்காய்
  7. 1- பட்டை
  8. 4 - கிராம்பு
  9. 1/2- கடல் பாசி
  10. 1/2 டீஸ்பூன்- சோம்பு
  11. 2- பெரிய வெங்காயம்
  12. 2- தக்காளி
  13. 2- பச்சை மிளகாய்
  14. 1 கைப்பிடி - புதினா இலை
  15. 1/2 கைப்பிடி- கொத்தமல்லி இலை
  16. 1- கறிவேப்பிலை கொத்து
  17. தேவையான அளவு உப்பு
  18. 1 டீஸ்பூன்- இஞ்சி பூண்டு விழுது
  19. 1 டீஸ்பூன்- மல்லித்தூள்
  20. 1/2 டீஸ்பூன்- மஞ்சள்தூள்
  21. 1 டீஸ்பூன்- கரம் மசாலா தூள்
  22. 3/4 டீஸ்பூன்- மிளகாய்த் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பாஸ்மதி அரிசியை 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த கறுப்பு கொண்டைக்கடலையை மூன்று விசில் வைத்து இறக்கிக் கொள்ளவும். 3/4 பாகம் வேக வைத்துக் கொள்ளவும்.ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து காயவிட்டு எடுத்து வைத்துள்ள பட்டவைகளை சேர்த்து பொரியவிடவும்.பின்பு பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி தயிர் புதினா கொத்தமல்லி ஒன்று ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்னர் வேக வைத்த கொண்டைக் கடலையையும் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கரை மூடி போட்டு மிதமான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.

  3. 3

    இது நன்றாக ஆறியதும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். இப்போது சுவையான ஆரோக்கியமான கருப்பு கொண்டைக்கடலை பிரியாணி தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes

More Recommended Recipes