"கேரட் அல்வா"(carrot halwa recipe in tamil)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

"கேரட் அல்வா"(carrot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3/4கிலோகேரட்-
  2. 1/2லிட்டர்ஆரோக்யா பால்-
  3. 300கிராம்ஜீனி-
  4. 100மில்லிசன்பிளவர் ஆயில்-
  5. 100மில்லிநெய்-
  6. -1துண்டுபட்டை
  7. 10முந்திரி பருப்பு-
  8. -15காய்ந்த திராட்சை
  9. 1/2டீஸ்பூன்ஏலக்காய் தூள்-
  10. 1சிறிய டீஸ்பூன்சிவப்பு கலர் பவுடர்-

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேரட் அல்வா செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.

    3/4கிலோ கேரட்-ஐ தோல் நீக்கி நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒவ்வொரு கேரட்டாக கிரேட்டரில் பூ போல் துறுவிக் கொள்ளவும்.

  2. 2

    அடிகனமான பாத்திரத்தை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் வைத்து குறைந்த எண்ணில் வைக்கவும்.
    50மில்லி நெய் ஊற்றிக் கொள்ளவும்.சூடான பிறகு

    10முந்திரி பருப்பை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்,15காய்ந்த திராட்சை இரண்டையும் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்...

  3. 3

    அடுத்து அதே பாத்திரத்தில் 100மில்லி சன்பிளவர் ஆயில் ஊற்றிக் கொள்ளவும்.

    எண்ணெய் காய்ந்த பிறகு 3/4கிலோ துறுவிய கேரட்-ஐ போட்டு 5-10நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளவும்...

    1/2லிட்டர் ஆரோக்யா பால் பாக்கெட்-ஐ உடைத்து ஊற்றவும்...

  4. 4

    அடுத்து பால் நன்றாக கொதித்து கேரட் வெந்த பிறகு.

    300கிராம் ஜீனி(சர்க்கரை)சேர்த்துக் கொள்ளவும்(போட்டோவில் பாதி தவறியதற்கு மன்னிக்கவும்).

    1/2டீஸ்பூன் ஏலக்காய் தூள்,1சிறிய டீஸ்பூன் சிவப்பு கலர் பவுடர் போடவும்.

  5. 5

    அடுத்து சிறிது நேரம் நன்றாக கொதித்த பிறகு வறுத்து வைத்த முந்திரி பருப்பு,காய்ந்த திராட்சையை போட்டு கிளரவும்...

  6. 6

    கேரட் அல்வா செய்யும் போது இடை இடையில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்....

    அதிக தீயில் அல்லது அதிகம் எண்ணில் வைத்து செய்யும்போது அடிக்கடி கிளறிக் கொள்ளவும்.......

    கேரட் அல்வா தயார்.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes