கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.
#npd1

கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)

எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.
#npd1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
  1. 1கப் கோதுமை மாவு
  2. 1/2கப் பேரிச்சம் பழம்
  3. 1/4கப் மிக்ஸ்டு நட்ஸ் (பாதாம்,முந்திரி,பிஸ்தா)
  4. 1/2கப் வெல்லம்
  5. 1/2டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. 1/2கப் நெய்

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவு,பேரிச்சை பழம்,நட்ஸ்,வெல்லம் பொடி,நெய்,ஏலக்காய் தூள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    டேட்ஸ், நட்ஸ்,வெல்லம் எல்லாம் தனித்தனியாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு சுற்று விட்டு எடுத்தால் போதும்.

  3. 3

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து,அதில் கோதுமை மாவு சேர்த்து மிகவும் மிதமான சூட்டில் வைத்து வாசம் வரும் வரை வறுக்கவும்.

  4. 4

    நன்கு வறுத்து வாசம் வந்தால்,மாவும்,நெய்யும் சேர்ந்து உதிரியாக வரும்.

  5. 5

    பின்னர் அதில் மிக்ஸியில் அரைத்து டேட்ஸ், வெல்லம், நட்ஸ்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து லட்டு உருண்டைகளாக உருட்டவும்.

  6. 6

    உருண்டை பிடித்த கோதுமை பேரிச்சை லட்டுகளை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.

  7. 7

    இப்போது மிக மிக சுவையாக இருக்கும் கோதுமை பேரிச்சை லட்டு சுவைக்கத்தயார்.

  8. 8

    சத்துக்கள் நிறைந்த இந்த லட்டு செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம். அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes