நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)

sasireka
sasireka @susisubha

நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
ஐந்து பேர்
  1. 200 கிராம் நூடுல்ஸ்
  2. 2 ஸ்பூன் எண்ணெய்
  3. 4 பூண்டு
  4. 1 ஸ்பூன் இஞ்சி பேஸ்ட்
  5. 2 அல்லது 3 பச்சை மிளகாய்
  6. சிறிதளவுகொத்தமல்லி
  7. வெங்காயம் பேஸ்ட்
  8. 1 ஸ்பூன் சோயா சாஸ்
  9. 1 ஸ்பூன் வினிகர்
  10. 1 ஸ்பூன் சர்க்கரை
  11. 1 ஸ்பூன் உப்பு
  12. சிறிதளவுமிளகுத்தூள்
  13. 1 கப் கேரட் பீன்ஸ்
  14. 1/2 கப் முட்டைக்கோஸ்
  15. 2ஸ்பூன் கான்பிளவர் பவுடர்
  16. சிறிதளவுபச்சை மிளகாய் பேஸ்ட்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    இரண்டு ஸ்பூன் ஆயிலை ஊற்றி அதில் பூண்டு நான்கினை பொடிப்பொடியாக நறுக்கி போட வேண்டும்.அதில் 1ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் மற்றும் 2 பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும் அதனுடன் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை சிறிது நேரம் வதக்க வேண்டும்

  2. 2

    சிறிதுநேரம் வதங்கியவுடன் அதனுடன் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்

  3. 3

    அதில் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய் பேஸ்ட் மற்றும் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்க்கவேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் சர்க்கரை தேவையான அளவு உப்பு சிறிது மிளகுத் தூள் சேர்க்க வேண்டும்

  4. 4

    கேரட் பீன்ஸ் அதனுடன் சேர்த்து அதனுடன் முட்டைக்கோஸ் சேர்க்க வேண்டும்.அதனுடன் 200 கிராம் நூடுல்ஸில் சேர்க்க வேண்டும்

  5. 5

    அந்த நூடுல்சை 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஒரு கப்பில் 2 ஸ்பூன் கான்பிளவர் பவுடர் மற்றும் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும். அந்த பவுடரை வேகும் நூடுல்ஸில் ஊற்றி கலக்கவேண்டும்

  6. 6

    5 நிமிடம் கழித்து அதனை எடுத்து ஒரு கப்பில் பரிமாறி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக தெரியும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sasireka
sasireka @susisubha
அன்று

Similar Recipes