சமையல் குறிப்புகள்
- 1
முட்டை பால் அடை ஒரு பாரம்பரியமான கேரள உணவாகும்.பொதுவாக திருமணமான புதிதில் வீட்டிற்கு வரும் மாப்பிள்ளைக்கு காலை சிற்றுண்டியாக இதை செய்து தருவார்கள். முதன் முதலில் இனிப்பு சாப்பிட்டு இனிய உறவை ஆரம்பிக்க வேண்டும் என்பது நோக்கமே அது.எனது தாயார் எனக்கு கற்றுக்கொடுத்த இந்த பாரம்பரியமான உணவினை நீங்களும் முயற்சித்து பாருங்களேன்
- 2
ஒரு தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும் முந்திரிப்பருப்பை நெய்யில் லேசாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்
- 3
ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி அளவு நெய் விட்டு அதில் துருவிய தேங்காய் பொடித்த முந்திரி பிறகு சுவைக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக வறுத்த வண்ணம் கலந்துகொள்ள வேண்டும் இப்பொழுது பூரணம் தயார்
- 4
இரண்டு மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்
- 5
10 சின்ன வெங்காயம் அரைத்து அதனை மாவோடு கலக்கவேண்டும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி சீரகத் தூளையும் மாவோடு சேர்க்க வேண்டும்
- 6
ஒரு முட்டை உடைத்து மாவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு மைதா மாவினை தண்ணியில் கட்டியில்லாமல் கலந்து அதையும் மாவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 7
மாவானது தோசை மாவு பதத்தை விட நீரோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் கல்லை அடுப்பில் காய வைத்து ஆப்பம் ஊற்றுவதை போல் மாவினை ஊற்ற வேண்டும்
- 8
மாவினை ஊற்றி உடன் மூடி வைத்து திருப்பி போடாமல் ஒரு புறம் வெந்தவுடன் எடுக்கவேண்டும்
- 9
இப்பொழுது நாம் செய்த தேங்காய்த்துருவல் இனிப்பு கலவையை பூரணம் போல் வைத்து முட்டை பாலாடையை சுருட்ட வேண்டும்
- 10
இப்பொழுது சுவையான முட்டை பாலாடை தயார் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இந்த உணவு குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது ஆகும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டை அடை(muttai adai recipe in tamil)
#qkஇந்த முட்டை அடையை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.வந்த விருந்தினருக்கு இதை மிகவும் சுலபமாக 5 நிமிடத்தில் செய்து கொடுக்கலாம். RASHMA SALMAN -
-
-
-
முந்திரி பால் அடை பிரதமன் (Munthiri paal adai prathaman recipe in tamil)
#kerala.... கேரளா பாயஸங்களில் ரொம்ப பிரதானமானது அடைபிரதமன் தான்.. தேங்காய் பாலில் அரிசி அடை போட்டு செய்வார்கள்.. அதையே நான் என்னோடு புதிய முயசிர்ச்சியில் முந்திரி பால் வைத்து செய்துள்ளேன்... செம டேஸ்ட்... அதை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
-
பால் கொழுக்கொட்டை (Paal kolukattai recipe in tamil)
நவராத்திரி விழாவில் பால் கொழுக்கொட்டை சாமிக்கு பிரசாதம்.தேங்காய் பால் கொழுக்கொட்டை#pooja Sundari Mani -
-
-
-
-
-
-
தேங்காய்ப் பால் அடபிரதமன் (Thenkaai paal adai prathaman recipe in tamil)
#kerala கேரளாவில் ஓணம் டைமில் செய்யக்கூடிய அடை பிரதமை தயார் Siva Sankari -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
-
-
-
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
More Recipes
கமெண்ட்