எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 நபர்
  1. 3 வேகவைத்த முட்டை
  2. 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  3. 2 டேபிள்ஸ்பூன் நசுக்கிய இஞ்சி பூண்டு
  4. 1/2 கப் தயிர்
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/4 டீஸ்பூன் சீரகம் தூள்
  8. 1/4 டீஸ்பூன் கரம் மாலா
  9. 1/3 கப் எண்ணெய்
  10. 2 பச்சை மிளகாய்
  11. தேவையானஅளவு உப்பு மற்றும் கசூரி மேதி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் முட்டையை வேகவைத்து கொள்ளவும்.பின் அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் நன்கு கலந்து கொள்ளவும். அதை ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்து கொள்ளவும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஜீரகம் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பின் தயிர் கலவையை சேர்த்து மூடி போட்டு கொதிக்கவிடவும்.

  5. 5

    பின், வறுத்து வைத்துள்ள முட்டைகள் மற்றும் கசூரி மேதி சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.சுவையான முட்டை கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

Sundara Gnanasekar
Sundara Gnanasekar @cook_17138110
Indha muttaya udaithu oothi seidhal taste vera levela irukum seidhu paarungal ma

எழுதியவர்

vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes