"சுவையான முட்டை பொடிமாஸ்"(egg podimas recipe in tamil)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#CF1
#குக்பேட்இந்தியா

"சுவையான முட்டை பொடிமாஸ்"(egg podimas recipe in tamil)

#CF1
#குக்பேட்இந்தியா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டை பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்:
  2. 3முட்டை
  3. தேவையான அளவுபாமோலின் ஆயில்-
  4. 1/4டீஸ்பூன்கடுகு-
  5. சிறிதளவுகருவேப்பிலை-
  6. 1பச்சை மிளகாய்-
  7. 13சின்ன வெங்காயம்-
  8. 2தக்காளி-
  9. தேவையான அளவுஉப்பு தூள்-
  10. 1/2டீஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது-
  11. 1/4டீஸ்பூன்மஞ்சள் தூள்-
  12. 1/4டீஸ்பூன்மிளகு தூள்-
  13. 1/4டீஸ்பூன்கரம் மசாலா தூள்-
  14. 1/2டீஸ்பூன்சீரகம் தூள்-
  15. 1டீஸ்பூன்மிளகாய் தூள்-
  16. தேவையான அளவுகொத்துமல்லித்தழை-

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டை பொடிமாஸ் செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.

    13சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    2தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    1பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

  2. 2

    கேஸ் அடுப்பின் மேல் ஒரு பாத்திரத்தை வைக்கவும்.அதில் தேவையான அளவு பாமோலின் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

    எண்ணெய் சூடான பிறகு 1/4டீஸ்பூன் கடுகு போட்டு பொறியவிடவும்,சிறிதளவு கருவேப்பிலை போடவும்.

    பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

  3. 3

    அடுத்து 1/2டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
    1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்&மிளகு தூள்&கரம் மசாலா தூள்,1/2டீஸ்பூன் சீரகம் தூள்,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

    சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.உடைத்து வைத்த 3முட்டைகளை சேர்த்து சிறிது நேரத்திற்கு பிறகு முட்டைகளை கிளரவும்.பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கொத்துமல்லித் தழைகளை போட்டு ஒன்றாக கிளரவும்.

  4. 4

    அடுத்து 2நிமிடம் மூடி வைக்கவும்.

  5. 5

    "சுவையான முட்டை பொடிமாஸ் தயார்"....

    இதே போன்று நீங்களும் செய்து சுவைத்து பாருங்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes