எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
  1. 1 கப் மைதா மாவு
  2. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. 1/4 கப் கேக் கலவை
  4. 2டேபிள் ஸ்பூன் பால்
  5. 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  6. 1/2 கப் உலந்த தேங்காய் பொடி
  7. 1/4 கப் ஆப்பிள் துருவல்
  8. 2டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  9. ஒரு சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    குக்கிஸ் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக எடுத்து வைக்கவும்.

  2. 2

    ஆப்பிள்லை தோல் சீவி,துருவி தயாராக வைக்கவும்.

  3. 3

    ஒரு பௌலில் கேக் கலவையை சேர்த்து, மைதா,சர்க்கரை, பட்டர், பேக்கிங் பவுடர், தேங்காய் பொடி, ஆப்பிள் துருவல் சேர்த்து நன்கு பிசையவும்.

  4. 4

    கொஞ்சம் பால் சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.

  5. 5

    பின்னர் எடுத்து சமமான வடிவத்தில் உருட்டி, கொஞ்சம் அழுத்தி, தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும். பின்னர் பேக்கிங் செய்யும் தட்டில் வெண்ணெய் தடவி வைக்கவும்.

  6. 6

    மைக்ரோவ் அவனில் 180 டிகிரியில் பத்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து பதினைந்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் ஆப்பிள் கோகோனட் குக்கிஸ் தயார்.

  7. 7

    தயாரான ஆப்பிள் கோகோனட் குக்கிஸ்ஐ எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். விருப்பப்படி ஜாம் வைத்து அலங்கரிக்கவும்.

  8. 8

    இப்போது மிகவும் சுவையான ஆப்பிள் கோகோனட் குக்கிஸ் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes