சிம்பிள் பரங்கிக்காய் கூட்டு(parangikkai koottu reecipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#CF7 கூட்டு

சிம்பிள் பரங்கிக்காய் கூட்டு(parangikkai koottu reecipe in tamil)

#CF7 கூட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1-1/2 கப் பரங்கிக்காய்
  2. 2டேபிள்ஸ்பூன் பயத்தம்பருப்பு
  3. 1/4 கப் தேங்காய்
  4. 2 வத்தல் மிளகாய்
  5. 1டீஸ்பூன் சீரகம்
  6. 1ஸ்பூன் கடுகு
  7. 1ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 1ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  9. உப்பு, கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பயத்தம்பருப்பை 10நிமிடம் தண்ணீரில் ஊற விட்டுக்கவும். பரங்கிகாயை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கவும்,

  2. 2

    ஸ்டவ்வில் வாணலி வைத்து தண்ணீர் விட்டு கொதி வந்ததும் பயத்தம்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்

  3. 3

    பாதி வெந்த பிறகு வெட்டி வைத்திருக்கும் பரங்கிக்காய் சேர்த்து, தேவையான உப்பு போட்டு வேக விடவும்.

  4. 4

    மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம், வத்தல் மிளகாய், தண்ணி சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக்கவும்

  5. 5

    பரங்கிக்காய் நன்கு வெந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து 1 நிமிடம் சூடு பண்ணி ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும்

  6. 6

    கரண்டியை ஸ்டவ்வில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கருவேப்பிலை தாளித்து பரங்கிக்காய் கூட்டில் கொடினால் சுவையான பரங்கிக்காய் கூட்டு ரெடி.. வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்யும் சிம்பிள் கூட்டு.. சாதத்துடன் தொட்டு சாப்பிட சுவையோ சுவையாக இருக்கும்..தேங்காய் எண்ணெயில் தாளி க்கும்போது ருசி பிரமாதமா இருக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes