முட்டைகோஸ் பொரித்த கூட்டு(cabbage koottu recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. கால் கிலோ முட்டைக்கோஸ்
  2. 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  3. இரண்டு டேபிள்ஸ்பூன் பயத்தம்பருப்பு
  4. ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  5. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. வறுத்து அரைக்க
  7. ஒரு டீஸ்பூன் எண்ணெய்
  8. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  9. ஒரு டீஸ்பூன் மிளகு
  10. ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  11. ஒரு டீஸ்பூன் சீரகம்
  12. 4 மிளகாய் வற்றல் இவற்றை லேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
  13. தாளிக்க ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  14. ஒரு டீஸ்பூன் கடுகு
  15. அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  16. ஒரு கொத்து கருவேப்பிலை
  17. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒருசிறிய குக்கரில் துவரம்பருப்பு பயத்தம்பருப்பு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல், மிளகு, தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக வறுத்து விட்டு கடைசியாக ஜீரகம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

  3. 3

    ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வறுத்த சாமான்களை போட்டு நைசாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது முட்டைக்கோசை சிறியதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்தவுடன் வேகவைத்த பருப்பை கலந்து கொதிக்க வைக்கவும்.

  5. 5

    இந்த சமயம் வறுத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து லேசாக கொதிக்க விட்டு இறக்கி விடவும்.

  6. 6

    கடைசியாக ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

  7. 7

    சுவையான கார சாரமான பொரித்த கூட்டு தயார். இதை சூடான சாதத்திற்கு நெய் போட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (3)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
பொறித்த கூட்டும் சூப்பர்,பாத்திரமும் சூப்பரோ சூப்பர் கண்ணு

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes