காரச் சட்னி (Spicy chutney recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

காரச் சட்னி (Spicy chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 2பெரிய வெங்காயம்
  2. 1தக்காளி
  3. 1டீஸ்பூன் மிளகு
  4. 1/2டீஸ்பூன் சீரகம்
  5. 4காஷ்மீர் மிளகாய்
  6. சிறிய நெல்லிக்காய் அளவுபுளி
  7. தேவையான அளவுஉப்பு
  8. தாளிக்க :
  9. 1டீஸ்பூன் எண்ணை
  10. 1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்து பருப்பு
  11. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும். தக்காளியை நறுக்கி வைக்கவும்.

  2. 2

    ஒரு பௌலில் கொதிக்கும் தண்ணீரில் காஷ்மீர் மிளகாயை சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும்.

  3. 3

    தவாவை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, புளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    அத்துடன் ஊற வைத்துள்ள காஷ்மீர் மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.

  6. 6

    அரைத்த சட்னியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். அத்துடன் எண்ணையை சூடாக்கி கடுகு உளுந்து தாளித்து சேர்த்தல் சுவையான காரச்சட்னி தயார்.

  7. 7

    இந்த காரச்சட்னி இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற எல்லா உணவுடனும் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes