சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)

#wt2
பூரிக்கு சென்னா மசாலா செய்யும்போது மிகுதியாக இருந்தால் மாலையில் குழந்தைகளுக்கு தோசைக்கல் வைத்து மொறுமொறுவென்று நெய் சேர்த்துக் கொடுக்கலாம். ஏற்கனவே நான் சென்னா மசாலா ரெசிபி கொடுத்துள்ளேன்.

சமையல் குறிப்புகள்
- 1
பூரி செய்தேன் 2 கப் சன்னா மசாலா மீதி இருந்தது. நாங்கள் வீட்டில் இருவர் என்பதால் நான்கு தோசைக்கு 2cup சென்னா மசாலா வந்தது. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் சூடு ஏறிய பிறகு தோசை மாவை தோசைக்கல்லில் ஊற்றி மெலிதாக தேய்த்து எண்ணெய் சுற்றி விடவும். ஒருபுறம் நன்கு சிவந்த பின் திருப்பிப் போடவும். உள் பக்கம் லேசாக வெந்தவுடன் மீண்டும் திருப்பி போட்டு அதற்குள் சென்னா மசாலா அவை நிரப்பவும். இரண்டாக மடித்து மேலே தாராளமாக நெய்விட்டு இரண்டு புறமும் ஒரு முறை திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்.
- 2
தங்களுக்கு தேவை என்றால் சென்னா மசாலா உடன் மேலே துருவிய கேரட் பொடியாக அரிந்த வெங்காயம் கறிவேப்பிலை,நிறைய பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை, சீஸ் அல்லது துருவிய பனீர்அல்லது வெண்ணெய் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுக்கலாம்.
- 3
மேலே அலங்கரித்து ஹோட்டல் ஸ்டைலில் தரவும். ரவுண்டு ரவுண்டாக வெங்காயம் தக்காளி போன்றவற்றை மேலே வைத்து கொத்தமல்லி தழை தூவி தொட்டுக்கொள்ள சட்னி உடன் கொடுக்கவும்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்