* பிஸ்கெட் கேக்*(185 வது ரெசிபி)(biscuit cake recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

நான் குக்பேடில் இணைந்து இன்றுடன் 1 வருடம் ஆகின்றது.இந்த பயணம் தொடர, அட்மின் மகி பாரு அவர்களும், மற்றவர்களும் பெரிதும் உதவி செய்தார்கள்.மேலும் அவர்களது ஆதரவு எனக்கு தேவை.உதவிய அனைவருக்கும் எனது நன்றி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4 மணி
8 பேர்
  1. 2 பாக்கெட்மாரி கோல்டு பிஸ்கெட்
  2. 6 டேபிள் ஸ்பூன்சர்க்கரை
  3. 1 1/2 டம்ளர்காய்ச்சி ஆறின பால்
  4. 1 டீ ஸ்பூன்சமையல் சோடா
  5. 1 டீ ஸ்பூன்பேக்கிங் சோடா
  6. 1 ஸ்பூன்எண்ணெய்
  7. 1 டீ ஸ்பூன்கோதுமை மாவு
  8. 2 டேபிள் ஸ்பூன்பொடியாக நறுக்கிய பாதாம்

சமையல் குறிப்புகள்

3/4 மணி
  1. 1

    பேனில் தட்டு வைத்து மூடி போட்டு அடுப்பை சிறியதில் வைத்து, 10 நிமிடம் சூடுபடுத்தவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் பிஸ்கெட்டை போட்டு நன்கு பொடியாக்கவும்.பொடித்ததை ஒரு பௌலில் போடவும்.

  3. 3

    பின் அதனுடன், பேக்கிங் சோடா, சமையல் சோடா, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.பாலை சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

  4. 4

    வேறொரு பாத்திரத்தின் அடியில் எண்ணெய் தடவி, மேலை கோதுமை மாவை தூவவும்.பின் அதன் மேல் கலந்த கலவையை ஊற்றி, மேலே, நறுக்கின பாதாமை போடவும்.

  5. 5

    பாத்திரத்தை சூடான பேனில் வைத்து, மூடி போட்டு மூடி, 40 நிமிடம் அடுப்பை சிறியதில் வைத்து வேக விடவும்.குச்சியால் குத்தி, ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு,ஆறினதும் தட்டில் திருப்பி போடவும்.

  6. 6

    பிறகு, கட் செய்து வில்லைகள் போடவும்.இப்போது, மிகவும் சுலபமான, சத்தான,* பிஸ்கெட் கேக்* தயார்.செய்து பார்த்து, குடும்பத்தாரை, மகிழ்ச்சி படுத்துங்கள்.

  7. 7

    இது,எனது முதல் வருட,185 வது ரெசிபி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes