ஓட்ஸ் பச்சைப்பட்டாணி சீலா(oats and peas dosa recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

ஓட்ஸ் பச்சைப்பட்டாணி சீலா(oats and peas dosa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேர்
  1. அரை கப் ஓட்ஸ்
  2. அரை கப் பச்சை பட்டாணி
  3. 3 பச்சை மிளகாய்
  4. ஒரு துண்டு இஞ்சி
  5. அரை டீஸ்பூன் ஓமம்
  6. சிறிதுகொத்தமல்லித் தழை
  7. சிறிதுமஞ்சள் பொடி
  8. அரை டீஸ்பூன் உப்பு
  9. தேவையானநெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஓட்ஸை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் பச்சை பட்டாணி பச்சை மிளகாய் இஞ்சி ஓமம் கொத்தமல்லித்தழை உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது ஓட்ஸை நன்கு கைகளால் மசித்து அரைத்த விழுதுடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அதை தோசை கல்லில் தோசை மாதிரி நெய் அல்லது எண்ணெய் விட்டு வார்த்து எடுக்கவும்.

  5. 5

    இது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கு உகந்தது. இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிடும்.இதற்கு எல்லா வகையான சட்னியும் நன்றாக இருக்கும். நான் நாட்டு சர்க்கரை வைத்து சாப்பிட்டேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Top Search in

Similar Recipes