தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 1/2 கிலோ தக்காளி
  2. 50 கிராம் பூண்டு
  3. 75 மில்லி நல்லெண்ணெய்
  4. 2 ஸ்பூன் கடுகு
  5. 1 ஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு
  6. தேவையானஅளவு கல் உப்பு
  7. 4 வரமிளகாய் தூள்
  8. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  9. 3 கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தக்காளியை பொடியாக நறுக்கிய கொள்ளவும் பிறகு நறுக்கும் போது தக்காளியின் காப்பு பகுதியை நறுக்கவும் பிறகு அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்

  2. 2

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

  3. 3

    பிறகு அடுப்பை ஆஃப் செய்யவும் பிறகு அதில் 4 ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்

  4. 4

    பிறகு அடுப்பை ஆன் செய்து கொள்ளவும் பிறகு அதில் அரைத்த தக்காளி விழுது, கல் உப்பு சேர்த்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கும்

  5. 5

    பிறகு அதை கிளறிக்கொண்டே இருக்கும் அதில் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறவும்

  6. 6

    பிறகு அதில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அதை இறக்கவும்

  7. 7

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான தக்காளி ஊறுகாய் தயார்

  8. 8

    இந்த ரெசிபி வெயிட் லாஸ் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  9. 9

    இந்த ரெசிபியை சப்பாத்தி,தோசை, இட்லி, சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்

  10. 10

    ஊறுகாயை கைப்படாமல் வைக்க வேண்டும்

  11. 11

    பிறகு ப்ரிட்ஜ்ல் வைத்தால் 1 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes