திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)

#made3
சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.
திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3
சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.
திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
எங்கள் வீட்டில் கொஞ்சம் பச்சை பட்டாணி இருந்ததால் அதை நான் வீண் செய்யாமல் இந்த தக்காளி சாதத்தில் சேர்த்துக் கொண்டேன் இதுபோல் தாங்களும் ஏதாவது காய்கறிகள் வீட்டில் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். அரிந்த தக்காளி பச்சை மிளகாய் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் மசாலா பொருட்களை சேர்த்து சிவக்க வதக்கவும். - 2
பிறகு வெங்காயத்தை வதக்கவும்.பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின்பு தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தங்கள் இஷ்டப்பட்டால் பட்டாணி சேர்த்துக் கொள்ளவும். அல்லது காய்கறிகள். இவை செய்வதற்குள் பத்து அல்லது பதினைந்து நிமிடம் திணையை கழுவி ஊற வைக்கவும். ஊற வைத்த தினையை தண்ணீர் வடித்து விட்டு காய்கறிகளுடன் சேர்த்து லேசாக சூடு ஏற வதக்கவும்.
- 3
பிறகு உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், வரமிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். ஒரு கப் அளவிற்கு இரண் டே கால் அல்லது இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதித்தவுடன் குக்கரை மூடி இரண்டு சவுண்ட் விடவும். பிறகு மிதமான தீயில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் குக்கரை அடுப்பில் வைத்திருக்கவும். பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து பார்க்கவும். வெந்த தினை அரிசி மேல் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும்.
- 4
சுவையான தக்காளி தினை சாதம் தயார். எப்போதும் போல் இதற்கும் தயிர்ப்பச்சடி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது. Meena Ramesh -
டோமொடோ பாத்🍅 (Tomato bath recipe in tamil)
#karnatakaசாதம் வடித்த பிறகு தக்காளி சாதம் செய்ய வேண்டி வந்தால் இது போல் செய்யலாம். இப்படி செய்யலாம் என்று இந்த தக்காளி சாதம் செய்யும் முறையை பெங்களூரில் வசிக்கும் என்னுடைய தோழி எனக்கு சொல்லி கொடுத்தார்கள். ஸ்கூலுக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். தேவையான அளவு சாதம் இதற்கு பயன்படுத்தி கொண்டு மீதி சாதத்தில் தயிர் சாதம் அல்லது வேறு ஏதாவது சாதம் தயார் செய்து கொடுக்கலாம். ஆபீஸ் எடுத்து செல்லவும் ஏற்ற சாதம். Meena Ramesh -
-
தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)
#ed1வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி. Gayathri Ram -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
#M2021இந்த சாதம் பிரியாணியை ஞாபகம் படுத்தும் வகையில் மிகவும் நன்றாக இருந்தது சிறுதானியத்துக்கூட பருப்பு சேர்ப்பதால மிகவும் மிருதுவாக இருக்கும் ஆறினாலும் வரண்டு போகாது Sudharani // OS KITCHEN -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
பனீர் கேப்ஸிகம் புலாவ் (Paneer capsicum pulao recipe in tamil)
#cookwithmilkபனீர் எனக்கு மிகவும் பிடிக்கும்.பணீரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.நடுத்தர வயதுடைய பெண்கள் கட்டாயம் உணவில் இதை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் இந்த வயதில் தான் பெண்களுக்கு எலும்பு தேயமானம் ஆரம்பிக்கும். ஆகவே எலும்பு உறுதிக்கு அடிக்கடி நடுத்தர வயதுக்காரர்கள் பணீர் எடுத்துக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது பனீர், சீஸ் போன்ற பால் பொருட்கள்.அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் நல்லது. பால் பொருட்களை கொண்டு வித விதமாக ஏதாவது அடிக்கடி செய்து தருவது மிகவும் நல்லது. என் தோழி பன்னீர் கேப்சிகம் ரைஸ் செய்வது எப்படி என்று சொல்லி கொடுதது போல் செய்துள்ளேன்.அவர்கள் கூறியது போல் பனீரை மேரினேட் செய்து இந்த புலாவ் செய்துள்ளேன்.நன்றி சிவகாமி🙏 Meena Ramesh -
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்.. punitha ravikumar -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
தக்காளி சாதம் 🍅🍅
#ilovecooking என்னோட பையனுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு தக்காளி சாப்பாடு அதனால் நான் இதை விரும்பி செய்வேன் சத்யாகுமார் -
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
துவரங்காய் பிரியாணி(பச்சை துவரை காய்) (Thuvarankaai biryani recipe in tamil)
#Jan1Healthy 2021🏋️💪பச்சை துவரை, பச்சை மொச்சை,மற்றும் பச்சை தட்டை காய்/தட்டை பயறு சீசன் இது.மேலும் இவ்வாறு பிரஷ்ஷாக கிடைக்கும் மொச்சை, துவரை, தட்டை பயறு வகைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும். கண்பார்வை மேலோங்கும். பச்சை துவரன்காய் கிடைத்தது.அதை வைத்து பிரியாணி செய்தேன்.வழக்கமாக நாம் செய்யும் எல்லா பிரியாணி களை விட சுவை நன்றாகவே இருந்தது.மேலும் குழந்தைகள் இது போன்ற பயறு வகைகளை சுண்டல் போன்று செய்து குடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.இப்படி பிரியாணி போன்று வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.😄 Meena Ramesh -
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran -
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தந்தூரி மசாலா (Thandoori masala recipe in tamil)
#home தந்தூரி சிக்கன் மற்றும் தந்தூரி வகைகள் அனைத்தும் குழந்தைகள் விரும்புவார்கள், இந்த மசாலாவை நாம் தயாரித்து வைத்துக் கொண்டு hotel சுவையிலேயே தந்தூரி வகைகள் அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்