வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)

வாழைத் தண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சிறுநீரக கல்லை சரி செய்யலாம். தம்மாத்துண்டு தண்டில் எவ்ளோ நன்மைகள் உள்ளது. வாழைத்தண்டை மாதம் ஒரு முறைசாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குணப்படுத்தலாம் .உடலுக்குத் தேவையான பொட்டாசியம் ,வைட்டமின் பிசிக்ஸ் உள்ளது. உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது. டையூரிடிக் பண்பு பெற்றுள்ளது.
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சிறுநீரக கல்லை சரி செய்யலாம். தம்மாத்துண்டு தண்டில் எவ்ளோ நன்மைகள் உள்ளது. வாழைத்தண்டை மாதம் ஒரு முறைசாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குணப்படுத்தலாம் .உடலுக்குத் தேவையான பொட்டாசியம் ,வைட்டமின் பிசிக்ஸ் உள்ளது. உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது. டையூரிடிக் பண்பு பெற்றுள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைத்தண்டை வட்டவட்டமாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும் நறுக்கும் பொழுது நூல் போன்று வரும் கசடுகளை எடுத்துவிடவும்.
- 2
வட்டமாக நறுக்கிய வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் மோரில் போட்டு வைக்கவும்.
- 3
துவரம்பருப்பை அரை வேக்காடாக வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
வாழைத்தண்டை 5 நிமிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் வத்தல் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பின்னர் அதில் வேக வைத்த வாழைத்தண்டு வேகவைத்த துவரம்பருப்பு போட்டு வதக்கவும்
- 7
இந்தக் கலவையை கலந்த பின்னர் அதில் தேங்காய் துருவலை போட்டு 2 முதல் 3 சொட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் இந்த கலவையை வைத்திருக்கவும்
- 8
இப்பொழுது சுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*வாழைத்தண்டு, மூங்தால் பொரியல்*(valaithandu moongdal poriyal recipe in tamil)
#MTவாழைத் தண்டு, காது நோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்தும். காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும் Lathamithra -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.இது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாகும் லேசாகும் வைக்க வாழைத்தண்டு உதவுகிறது. )#everyday 2 Sree Devi Govindarajan -
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra -
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
-
* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)
வாழைத் தண்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றது.இதன் ஜூஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.சிறுநீரை பெருக்க உதவுகின்றது.சிறுநீர் சுருக்கு, எரிச்சலை குணமாக்க வாழைத் தண்டு ஜூஸ் பயன்படுகின்றது. Jegadhambal N -
-
-
வாழைத்தண்டு பொரியல்
#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும். Shanthi -
-
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
வாழைத்தண்டு வடை(valaithandu vadai recipe in tamil)
வாழைத்தண்டை பயன்படுத்தி வடை செய்யலாம் சத்தானது சுலபமானது. Rithu Home -
வாழைத் தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சத்து நிறைந்த ஒரு உணவு shangavi samayal -
முட்டைக்கோஸ் சட்னி(cabbage chutney recipe in tamil)
பச்சை இலைக் காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒரு வகையாகும்.இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்டுகள் உள்ளன.முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகளை காணலாம்.1. அல்சைமர் நோயை குணப்படுத்தும்.2. முட்டைக்கோசில் குளுட்டோமைன் என்னும் அமினோ ஆசிட் இருப்பதால் அல்சர் நோயை குணப்படுத்தும்.3.ஆன்தோசயனின் எனும் வைட்டமின் இருப்பதால் இது மூளையில் ஏற்படும் பிளாக்கை குணப்படுத்தும்.4. உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.4. இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்கும். கண்புரை வராமல் இருக்கும். இவ்வளவு பயன் தரும் இந்த காய்கறியை வாரம் ஒரு முறையாவது உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். Lathamithra -
தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உடலுக்கு நல்லது Gothai -
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
#MTவாழைத் தண்டின் சாறை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும். வாழைத் தண்டின் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
தட்டான் காய் என்று கிராமத்தில் கூறுவார்கள் இதை பொரியல் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாக உள்ளது வைட்டமின்கள் மினரல்கள் தாது உப்புக்களும் இவ்வகை உணவில் அதிகம் உள்ளது. Lathamithra -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3 Manchula B -
-
-
வாழைத்தண்டு பருப்பு பொரியல் (Vaazhaithandu paruppu poriyal recipe in tamil)
#jan1 Priyaramesh Kitchen
More Recipes
கமெண்ட்