தேன்சுவை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

இந்த வகை சட்னியில் வெள்ளைப்பூண்டு இஞ்சி இவை அனைத்தும் சேர்ப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சைட் டிஷ் ஆக அமைந்துள்ளது. தேங்காயை வறுத்து சேர்ப்பதால் அபார ருசி யாக உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்.
நான்கு பேர்
  1. ஒரு கப் தேங்காய் துருவல்
  2. ஒரு சிறிய துண்டுஇஞ்சி
  3. 10 பல்பூண்டு
  4. 4மிளகாய் வற்றல்
  5. 2 டீஸ்பூன்குழம்பு கடலை பருப்பு
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. சிறிதளவுபுளி

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்.
  1. 1

    ஒரு கடாயில் எண்ணை ஊற்றி முதலில் குழம்பு கடலைப்பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்னர் வற்றல் அதன்பின் வெள்ளை பூண்டு இஞ்சி,தேங்காய் துருவல், புளி சிறிதளவு அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வறுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் கறிவேப்பிலையை வறுத்தெடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த சட்னி தாளித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். சுவையான தேங்காய் சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Lathamithra
Lathamithra @lathasenthil
அன்று
Srivilliputhur

Similar Recipes