வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai

#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம்

வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)

#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கைப்பிடி வறுத்த வேர்க்கடலை
  2. 1/2 கைப்பிடி பொட்டுக்கடலை
  3. 4 பூண்டு
  4. 2 சில்லு தேங்காய்
  5. 1 பச்சைமிளகாய்
  6. கொஞ்சம்புளி
  7. தேவைக்கேற்ப உப்பு
  8. தாளிக்க
  9. கடுகு உளுந்து
  10. ஒரு கொத்து கருவேப்பிலை
  11. தேவைக்கேற்ப எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், பூண்டு, புளி, உப்பு,தேங்காய் எல்லாம் மிக்ஸில போட்டு ஒரு சுத்து சுத்த விட்டுட்டு அப்பறம் தண்ணி ஊத்தி மறுபடி அரைக்கணும்..

    குறிப்பு..
    இந்த செய்முறை வறுத்த வேர்க்கடலைக்கு தான் சரி வரும்... பச்சை வேர்க்கடலைல தான் செய்வேன்னு அடம்பிடிச்சா, நீங்க கடாய்ல கொஞ்சம் எண்ணெய் ஊத்தி., புளி, தேங்காய் தவிர மத்தவைங்கள போட்டு ஒரு வதக்கு வதக்கி ஆற வச்சு புளி, தேங்காய், உப்பு போட்டு அரைச்சுக்கோங்க...

  2. 2

    நல்ல மைய அரைச்ச பிறகு தாளிச்சு விடனும்... அம்புட்டு தான்., சுவையான, எளிமையான வேர்க்கடலை சட்னி தயார்..

    ஆனந்தமாக சாப்பிடுங்க.
    ஆரோக்கியமா இருங்க...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai
அன்று
நான் நான்சி மெர்வின்., புனை பெயர் தமிழ்மொழியாள்.. நான் ஒரு பதினைஞ்சு வருசம் hostel ல இருந்தேங்க... அதோட தாக்கம் கல்யாணத்துக்கு அப்பறம் என்ன ஒரு சிறந்த சமையல் கலைஞியா மாத்திடுச்சு😜😜😜... hostel வாழ்க்கையில எனக்கு கிடைக்காத அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் தேடி தேடி தேடி சமைச்சு இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கோம்...என் கணவருக்கும் என் சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும்... அவங்களுக்காக தான் fried rice ல இருந்து bread வரை எந்த chemical ம் chemical preservative ம் சேர்க்காம வீட்லயே செஞ்சு பழகிட்டு செஞ்சு கொடுத்து ஆனந்தமா சாப்பிடுறோம்.. ஆரோக்கியமாக இருக்கோம்...
மேலும் படிக்க

Similar Recipes