மீன் கட்லட்(fish cutlet recipe in tamil)

Nida
Nida @Nida_Begam

மீன் கட்லட்(fish cutlet recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 200 கிராம் முள் இல்லாத மீன் துண்டுகள்
  2. 1 சிறியஉருளைக்கிழங்கு
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  5. 1 பச்சை மிளகாய்
  6. 1/4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/4 கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  10. தேவையானஅளவு பிரெட் தூள்
  11. சோள மாவு கரைசல்
  12. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மீன் துண்டுகளை தண்ணீரில் கொஞ்சம் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு தண்ணீரை வடித்து ஆற விட்டு உதிர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    வேக வைத்த உருளைக்கிழங்கை சீவி மீன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம். இதில் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி இலைகள் சோயா சாஸ் உப்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

  3. 3

    இதனை வடைகளாக தட்டி கொள்ளவும். சோள மாவு கரைசலில் இதனை முக்கி எடுத்து பிரெட் தூளில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

  4. 4

    தோசைக்கல்லில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து தயார் செய்த கட்லெட்டுகளை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nida
Nida @Nida_Begam
அன்று

Similar Recipes