வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ் (Banana oats meal cookies)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ் (Banana oats meal cookies)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 3 வாழைப்பழம்
  2. 1/2 கப் ஓட்ஸ்
  3. ஒரு சிட்டிகை உப்பு
  4. 1/2 கப் உலர்ந்த திராட்சை
  5. 1/4 டீஸ்பூன் பட்டை பொடி
  6. 2 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நன்கு பழுத்த வாழைப் பழத்தை எடுத்து நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    அத்துடன் ஓட்ஸ் பொடித்து சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    பின்னர் ஒரு சிட்டிகை உப்பு,உலந்த திராட்சை சேர்த்து ஸ்பேட்டுலா வைத்து நன்கு கலந்து விட்டால் குக்கீஸ் கலவை தயார்.

  4. 4

    குக்கீஸ் பேக் செய்ய பேக் ட்ரே எடுத்து அதில் பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும்.

  5. 5

    பின்னர் கலந்து வைத்துள்ள குக்கீஸ் கலவையை ஒரு ஐஸ் கிரீம் ஸ்கூப்பில் எடுத்து பேக்கிங் ஷீட்டில் வைக்கவும்.

  6. 6

    அதன் மேல் கரண்டி வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து, சாக்கோ சிப்ஸ் வைத்து அழுத்தவும்.

  7. 7

    பின்னர் மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வைத்து பத்து நிமிடங்கள் பிரஹீட் செய்து பதினைந்து நிமிடங்கள் பேக் செய்யவும்.

  8. 8

    அப்படியே கொஞ்சம் விட்டு ஆறியவுடன் எடுத்தால் சுவையான கிரிஸ்பியான பனானா ஒட்ஸ் குக்கீஸ் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Super sis👌 cookpad English la share pannalam illa.. English la type panni podunga sis..

Similar Recipes