ஆம்லெட் ஆப்பம்(omelette appam recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#FC

ஆம்லெட் ஆப்பம்(omelette appam recipe in tamil)

#FC

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1டம்ளர் இட்லி அரிசி
  2. 1டம்ளர் புழுங்கல் அரிசி
  3. 1 1/2கப் வேக வைத்த சாதம்
  4. 1மேசைக்கரண்டி பாஸ்மதி அரிசி
  5. 1/2ஸ்பூன் வெந்தயம்
  6. 2டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1/2கப் தேங்காய் துருவல்
  9. 1டம்ளர் தேங்காய் பால்
  10. 1 முட்டை
  11. 1/2ஸ்பூன் மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் அரிசி, உளுத்தம்பருப்பு இவற்றை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்னர் கிரைண்டரில் முதலில் வேக வைத்த சாதம் சேர்த்து மையாக அரைத்து வைத்து கொள்ளவும்.பிறகு மிக்ஸியில் தேங்காய் துருவல் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கிரைண்டரில் ஊற்றி அரைத்து எடுத்து கொள்ளவும். இதில்

  3. 3

    பிறகு ஊற வைத்த அரிசி யை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து சேர்த்து நன்கு மையமாக அரைத்துஎடுத்து கொள்ளவும். பிறகு மாவை ஒரு பவுலில் மாற்றி சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.

  4. 4

    மாவு நன்கு புளித்து வந்த பிறகு மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தேங்காய் பால் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

  5. 5

    பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு மாவை கலந்து விடவும்.ஒரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.

  6. 6

    அடுப்பில் ஆப்ப சட்டி வைத்து ஒரு கரண்டி மாவு ஊற்றி சுற்றி விட்டு இந்த அடித்த முட்டை ஊற்றி சுற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.

  7. 7

    சுவையான ஆம்லெட் ஆப்பம் தயார். நன்றி

  8. 8

    நானும் என் தோழி ரேணுகா அவர்களும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் மற்றும் பாயா செய்து உள்ளோம். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes