ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி.

ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)

#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 நபர்கள்
  1. 200கிராம் - ப்ரோக்கலி
  2. 2- வேகவைத்து உருளை கிழங்கு
  3. 100 கிராம் - பச்சை பட்டாணி
  4. 1 - பெரிய வெங்காயம்
  5. 1/2 தே.க - கடுகு,உளுந்து
  6. 1/2 தே.க - சீரகம்
  7. 1/2 தே.க - சோம்பு
  8. 1- பச்சை மிளகாய்
  9. 6 பல் - பூண்டு
  10. சிறிதளவு- கறிவேப்பிலை
  11. தேவையானஅளவு - உப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ப்ரோக்கலி நன்றாக வேக வைத்து எடுக்கவும். (அதில் உள்ள பூச்சிகளை வெளியேற செய்வதற்காக) அடுப்பில் வைத்து அமைந்ததும் எண்ணெய் ஊற்றவும்.

  2. 2

    அதில் சீரகம் கடுகு உளுந்து சோம்பு சேர்த்து மிதமான தீயை வைத்து வதக்கவும்.

  3. 3

    பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், கறிவேப்பிலை வெங்காயம் வதங்குவதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்கவும்.

  4. 4

    இத்துடன் பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும். பிறகு பட்டாணி சேர்த்து வெகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கிளறி மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

  6. 6

    இறுதியாக ப்ரோக்கலி சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மசாலா ஒன்று சேர நன்றாக வதக்கவும்.
    சுவையான ப்ரோக்கலி பட்டாணி உருளை மசாலா தயார். சாதம் சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்ற டிஷ் ஆக இருக்கும்.

  7. 7

    ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.

    ப்ராக்கோலியில் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes