மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
#jan1

மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)

பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
#jan1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
  1. 1 கப் பிரஷ் மொச்சை
  2. 2உருளைக் கிழங்கு
  3. 1/4 கப் தேங்காய் துண்டுகள்
  4. 1/2 கப் சாம்பார் வெங்காயம்
  5. 5 பால் பூண்டு
  6. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  7. 1பெரிய தக்காளி
  8. 4வற்றல் மிளகாய்
  9. 1/2 டீஸ்பூன் சீரகம்
  10. 1 டீஸ்பூன் சோம்பு
  11. 1 டீஸ்பூன் கசகசா
  12. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  13. 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  14. உப்பு தேவையான அளவு
  15. கறிவேப்பிலை
  16. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  17. 1/4 டீஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மொச்சையை உரித்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    உருளைக் கிங்குகளை வேகவைத்து தோல் உரித்து துண்டுகள் செய்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  4. 4

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தயாராக வைத்துள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தனியாத்தூள் கலந்து இறக்கவும்.

  5. 5

    பின்னர் மிக்ஸ் ஜாரில் தேங்காய்,வறுத்த மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  6. 6

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து உரித்து வைத்துள்ள மொச்சை சேர்த்து ஸ்டவ்வில் வைத்து வேக வைக்கவும்.

  7. 7

    பின் அரைத்து வைதுள்ள மசாலா விழுதை வேகும் மொச்சை உடன் சேர்த்து கலந்து, வேகவைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும். நன்கு வேகவிட்டு,உப்பு சரி பார்த்து இறக்கினால் குழம்பு தயார்.

  8. 8

    கடைசியாக குழம்பை பரிமாறும் பௌலுக்கு மாற்றி, ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை,நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கி குழம்பில் சேர்க்கவும்

  9. 9

    இப்போது மிகவும் சுவையான
    மொச்சை உருளைக்கிழங்கு மசாலா குழம்பு சுவைக்கத் தயார். சாதம், சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes