வாழைத்தண்டு கூட்டு (plantain stem kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பாசிப்பருப்பை சேர்த்து வறுக்கவும். சூடு ஆறியதும் தண்ணீரில் சேர்த்து கழுவி,ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து கொதித்ததும், அதில் ஊற வைத்துள்ள பருப்பை சேர்த்து வேக வைக்கவும்.
- 3
வாழைத்தண்டை தோல் சீவி பொடியாக நறுக்கி,நார் எடுத்து தயாராக, மோர் கலந்த தண்ணீரில் போட்டு தயாராக வைக்கவும்.
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள்,சீரகம், மிளகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
பின்னர் வேகும் பருப்பில் நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.
- 6
பருப்பு,தண்டு சேர்த்து நன்கு வெந்தவுடன்,உப்பு சரி பார்த்து இறக்கினால் பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு தயார்.
- 7
தயாரான கூட்டை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 8
கடைசியாக தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் கடுகு,சீரகம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கூட்டில் சேர்த்து கலந்தால் சுவையான பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு சுவைக்கத்தயார்.
- 9
இந்த கூட்டில் வெங்காயம் ஏதும் சேர்க்காமல் செய்துள்ளதால் இது ஒரு சாத்விக் உணவாக விரத நாட்களில் உட்கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும். மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
-
வாழைத்தண்டு பொரியல்
#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும். Shanthi -
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு (Paasiparuppu vaazhaithandu kootu recipe in tamil)
#jan1 Priyamuthumanikam -
-
-
-
-
-
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
-
-
-
-
-
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும் Lathamithra -
வாழைத்தண்டு கடலை பருப்பு பொரியல்(Plantain stem curry in Tamil)
*வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.*அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண் கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.#Ilovecooking kavi murali -
-
-
அரட்டி தூட்ட (Arati Doota recipe in tamil)
ஆந்திராவில் அரட்டி தூட என்பது நம் வாழைத்தண்டு தான். இதை அவர்கள் ஒரு வித்யாசமாக செய்வார்கள். அதைத்தான் இங்கு செய்து பகிந்துள்ளேன். மிகவும் சுவையான வாழைத் தண்டுப்பொரியல்.#ap Renukabala -
-
-
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
More Recipes
- தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
- விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
- விரதசுண்டல்(sundal recipe in tamil),
- விரத ஸ்பெஷல், *தேங்காய் பூரணம்*(viratha special thengai pooranam recipe in tamil)
- விரத சீரக மிளகு சாதம்(milagu seeraka satham recipe in tamil)
கமெண்ட் (5)