வெள்ளை ரவை மிளகு உப்புமா (viratha white rava pepper upma recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#VT

வெள்ளை ரவை மிளகு உப்புமா (viratha white rava pepper upma recipe in tamil)

#VT

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப் வெள்ளை ரவை
  2. 2 டீஸ்பூன் மிளகு
  3. 1/2 ஸ்பூன் சீரகம்
  4. 1 டேபிள் ஸ்பூன் முந்திரி
  5. 1/2 டீஸ்பூன் கடுகு
  6. 2வற்றல் மிளகாய்
  7. கறிவேப்பிலை
  8. தேவையான அளவுஉப்பு
  9. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. 1/4 கப் தேங்காய் துருவல்
  11. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    மிளகு உப்புமா செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கொஞ்சமாக நெய் சேர்த்து ரவையை போட்டு நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வேறு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம்,மிளகு,முந்திரி சேர்த்து பொரிந்ததும், கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்ததும், வறுத்து வைத்துள்ள ரவையை சேர்க்கவும். கட்டிகள் வராமல் கலந்து மிதமான சூட்டில் மூடி வைக்கவும்.

  5. 5

    ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்து,கலந்து ஒரு ஸ்பூன் நெய்,நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான வெள்ளை ரவை மிளகு உப்புமா தயார்.

  6. 6

    தயாரான வெள்ளை ரவை மிளகு உப்புமாவை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து மல்லி இலை,முந்திரி பருப்பு தூவி பரிமாறவும்.

  7. 7

    விரதம் இருக்கும் நாட்களில் இந்த முறையில் உப்புமா செய்து சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes