விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#VT
விரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.

விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)

#VT
விரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6பேர்
  1. 1 கப்முழு உளுந்து
  2. 2 டேபிள் ஸ்பூன்பச்சரிசி
  3. 2ப.மிளகாய் (பெரியது)
  4. ருசிக்குஉப்பு
  5. 1 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை நறுக்கினது
  6. 1 டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை நறுக்கினது
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    உளுந்தையும், பச்சரிசியையும் சுத்தம் செய்து தேவையான சுடு தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஊறியதும் தண்ணீரை நன்கு வடித்து, மிக்ஸி ஜாரில், உளுந்துடன் ப.மிளகாய் சேர்க்கவும்.

  4. 4

    வடிகட்டின தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து நன்கு அரைத்து, பௌலில் எடுக்கவும்.

  5. 5

    அடுப்பை ஹையில் வைத்து எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, மாவில், உப்பு,நறுக்கின கொத்தமல்லி, கருவேப்பிலையை சேர்த்து நன்கு கலந்து, வட்டமாக தட்டி, நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

  6. 6

    இதேபோல் எல்லா மாவையும், தட்டி போட்டு இரண்டு பக்கமும், நன்றாக வேக வைத்து தட்டில் எடுத்து அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    வடையை தட்டில் அடுக்கவும்.இப்போது,*யம்மி உளுந்து வடை* தயார்.இதில், சாம்பார் வடை, ரச வடை, தயிர் வடை என்று விதவிதமாக செய்யலாம்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes