அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)

#ONEPOT
இது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா.
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOT
இது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா.
சமையல் குறிப்புகள்
- 1
3/4 ஆழாக்கு பச்சரிசி,1/4 ஆழாக்கு துவரம் பருப்பு இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக (ரவை பதத்திற்கு) அரைத்து விடவும்.
- 2
8 வரமிளகாயை கிள்ளி வைக்கவும். கறிவேப்பிலையை சிறிது கழுவி எடுத்து வைக்கவும். 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் எடுத்து வைக்கவும்.
- 3
குக்கரில் 2 குழிக்கரண்டி ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு 2 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக தாளித்து பெருங்காயம் 1/2 டீஸ்பூன் வர மிளகாய் 8 கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 4
அதில் துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து வதக்கவும். 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மிக்ஸி ஜாரில் பொடித்து வைத்த அரிசி துவரம் பருப்பு மாவை 1 கப் சேர்க்கவும்.
- 5
மாவை சேர்த்தவுடன் மூடிவிட்டு, அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறிவிட்டு 45 நிமிடம் வேகவிடவும். அடிக்கடி கிளறி விடவும். மீதமுள்ள 1 குழிகரண்டி ஆயிலை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 6
சுவையான அரிசி பருப்பு உப்புமா ரெடி😄😄 இதற்கு தொட்டு சாப்பிட பொட்டுக்கடலை தேங்காய் சட்னி, புளி தண்ணீர், சர்க்கரை, தயிர் தாளித்தும் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)
#ed3 # இஞ்சிஅரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன். Meena Ramesh -
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
-
பச்சை அரிசி துவரம் பருப்பு உப்புமா மற்றும் பச்சை புளி தொக்கு (Arisi paruppu upma recipe in tamil)
#GA4 week5பச்சை அரிசி துவரம் பருப்பில் சுவையான உப்புமா Vaishu Aadhira -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
சிகப்பரிசி உப்புமா (Sikapparisi upma recipe in tamil)
#Heartசத்துக்கள் நிறைந்துள்ள சிகப்பரிசி உப்புமா Vaishu Aadhira -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
-
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
அரிசி உப்புமா (Arisi upma recipe in tamil)
பச்சரிசி 1உழக்கு பாசிபருப்பு கால் உழக்கு வறுத்து ரவை உடைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி ஒரு பங்கு ரவைக்கு 2.5பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் எண்ணெயில் வேகவிடவும் ஒSubbulakshmi -
More Recipes
கமெண்ட் (6)