கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC

கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)

தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45-60 நிமிடங்கள்
8 நபர்கள்
  1. 2கப் கொழுக்கட்டை மாவு
  2. 1டேபிள் ஸ்பூன் நெய்
  3. 1/4 டீஸ்பூன் உப்பு
  4. பூரணம் செய்ய :
  5. 1+1/2 கப் தேங்காய் துருவல்
  6. 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 1/2 கப் வெல்லம்
  8. 1 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

45-60 நிமிடங்கள்
  1. 1

    அரிசி மாவை ஒரு தட்டில் கொட்டி உப்பு, நெய் சேர்த்து நன்கு கலந்து பிசறி வைக்கவும். ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அடுப்பை அணைத்து மாவைக் கொட்டிக் கிளறி கெட்டியானதும் 5 நிமிடம் மூடி வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி, வாணலியில் ஊற்றி கொதித்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

  3. 3

    அரிசி மாவை எடுத்து கையில் எண்ணெய்த் தடவிக் கொண்டு மாவை நன்கு பிசைந்து வைக்கவும். தேவையான அளவு எடுத்து அச்சில் வைத்து தட்டி பூரணம் வைத்து மூடி சேப் செய்து எடுத்து வைக்கவும். இதேப் போல் அனைத்தும் செய்து வைக்கவும்.

  4. 4

    இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை அடுக்கி 8-10 நிமிடம் வேக வைக்கவும். 5 நிமிடம் கழித்து எடுத்து வைக்கவும். வினாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes