பாதுஷா (badusha/balushahi recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும் அத்துடன் உருகிய நெய்யையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
நெய் மாவுடன் கலந்தவுடன் கையில் பிடித்து பார்த்தால் நன்றாக பிடிக்க வரவேண்டும் அதுதான் பதம் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விரல்களால் பிசைய வேண்டும்.. அழுத்திப் பிசைய கூடாது அழுத்திப் பிசைந்தால் லேயர் லேயராக வராது... எல்லாம் ஒன்றாகக் கலந்தால் போதும் நன்றாக பிசைய வேண்டும் என்பதெல்லாம் இல்லை..
- 3
பிசைந்த மாவை இரண்டு கைகளாலும் எடுத்து பிளந்து பார்த்தால் உள்ளே லேயர் லேயராக தெரியும் இதுதான் பக்குவம் அதிகமாக பிசைய வேண்டாம்... இதை 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வைக்கவும்.. 15 நிமிடம் ஆவதற்குள் நாம் சர்க்கரை பாகு காய்ச்சி அதை லேசாக ஆற வைக்கவும் பாதுஷாவை பொரித்து லேசான சூட்டில் இருக்கும்போது சர்க்கரை பாகில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.. பாகு அதிக சூடாக இருக்கக் கூடாது..
- 4
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும் அரைப் பதம் தெரியவில்லை என்றால் கரண்டியில் சர்க்கரைப் பாகை தூக்கி ஊற்றினால் கடைசி சொட்டு நன்றாக ஜவ்வு மாதிரி கீழே விழும் அதுதான் பக்குவம்...
- 5
ஏலக்காய் தூளை சேர்க்கவும்.. நான் இதில் கேசர் கலர் சேர்த்து உள்ளேன்.. இது குங்குமப்பூ சேர்த்தது போல் இருக்கும் உங்களிடம் குங்குமப்பூ இருந்தால் நீங்கள் இந்த கலருக்கு பதிலாக அதை சேர்த்துக் கொள்ளலாம்..
- 6
இப்போது பாதுஷாவை கையில் எடுத்து லேசாக வட்டமாக உருட்டி வடை போல் தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட வேண்டும்.. எண்ணெய் எப்படி காய வேண்டும் என்றால் பாதுஷாவை அதில் போட்டால் 1,2 பப்பிள்ஸ் தான் மேலே வரவேண்டும் அதிகமாக எண்ணெய் காய்ந்து இருக்க கூடாது..
- 7
இருபக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் ஊற வைத்தால் போதுமானது.. அதற்கு மேல் ஊற வைத்தால் குலோப்ஜாமுன் மாதிரி ஆகிவிடும்..
- 8
விருப்பப்பட்டால் மேலை பிஸ்தாவும் சில்வர் லீப்பும் வைத்து அலங்கரிக்கலாம்.. இப்போது சுவையான இனிப்பான பாதுஷா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
-
-
-
-
பாதுஷா
பாதுஷா/பாலுஷகி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை.இது இந்திய தேசத்தில் பிரபலமானது.இது நார்த் இந்தியாவில் பாலுஷகி என்றும் தென்னிந்தியாவில் பாதுஷா என்றும் அழைக்கப்படுகிறது.இது மைதா,சர்க்கரை,வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை.என்னுடைய சொந்த ஊரில் -பாதுஷா மீது திக்கான சர்க்கரை கோட்டிங் கொடுத்து ஸ்மூத்தாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
-
-
எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம். #the.chennai.foodie #the.chennai.foodie The.Chennai.Foodie -
-
-
-
-
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
-
-
-
-
ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)
#TheChefStory #ATW2இந்த ஃபரெளனி மிகவும் சாஃப்ட்-டாக,சுவையாக இருக்கும்.அனைவராலும் விரும்பப்டும் ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (16)