வேர்க்கடலை மசாலா சுண்டல்(Groundnut masala sundal recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  1. 1 கப் பச்சை வேர்க்கடலை
  2. 1/4 கப் தேங்காய் துருவல்
  3. 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
  4. தேவையான அளவுஉப்பு
  5. தாளிக்க:
  6. 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  7. 1/4 டீஸ்பூன் கடுகு
  8. 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  9. 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  10. 4 பச்சை மிளகாய்
  11. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பச்சை வேர்க்கடலையை தண்ணீரில் கழுவி,கொஞ்சம் தண்ணீர்,உப்பு சேர்த்து குக்கரில் நான்கு விசில் வைத்து எடுக்கவும்.

  2. 2

    அதில் உள்ள தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    அத்துடன் வேக வைத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து, சாட் மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுண்டல் தயார்.

  6. 6

    தயாரான சுண்டலை எடுத்து ஒரு பௌலில் சேர்ககவும். இப்போது சுவையான சத்தான வேர்க்கடலை மசாலா சுண்டல் சுவைக்கத்தயார்.

  7. 7

    இந்த சுண்டல் நவராத்திரியில் ஒரு நாள் சாமிக்கு படைத்தும் வழிபடுவார்கள். நான் சரஸ்வதி பூஜைக்கு செய்து படைத்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes