எள்ளு வறுகடலை பர்பி (Seasame fried gram burfi recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#SA
எள்ளு உருண்டை எப்போதும் செய்கிறோம்.அதனால் இந்த முறை நான் எள்ளு, வறுகடலை சேர்த்து பர்பி முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

எள்ளு வறுகடலை பர்பி (Seasame fried gram burfi recipe in tamil)

#SA
எள்ளு உருண்டை எப்போதும் செய்கிறோம்.அதனால் இந்த முறை நான் எள்ளு, வறுகடலை சேர்த்து பர்பி முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1 கப் கருப்பு எள்ளு
  2. 1/4 கப் வறுகடலை
  3. 1&1/4 கப் சர்க்கரை
  4. 1/4 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    எள்ளு, வறுகடலை,சர்க்கரை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்னர் எள்ளை தண்ணீரில் கழுவி,காய வைத்து எடுத்து கொஞ்சம் வறுத்து எடுக்கவும். வறுகடலையை இரண்டு நிமிடங்கள் வறுத்து எடுத்து தயாராக வைக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் நன்கு கலந்து விடவும். ஒரு கம்பி பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள,எள்ளு, வறுகடலையை சேர்த்து கலந்து கொண்டே இருக்கவும்.

  4. 4

    கொஞ்சம் கெட்டியாகி சுருண்டு வரும்போது எடுத்து ஒரு நெய் தடவிய தட்டில் சேர்த்து சமப்படுத்தி விடவும்.

  5. 5

    ஐந்து நிமிடங்கள் விட்டு கத்தியால் விருப்பப்படி துண்டுகள் போட்டு எடுத்தால் சுவையான சத்தான எள்ளு வறுகடலை பர்பி ரெடி.

  6. 6

    இந்த எள்ளு,வறுகடலை பர்பி செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes