* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)

#Kp
இந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட.
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kp
இந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெண்டைக்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், தே.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ப.மிளகாய், சி.மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 3
தாளித்ததும், வெண்டைக்காய், ம.தூள், உப்பு போட்டு வதக்கவும்.
- 4
பாதி வெந்ததும், மிளகாய் தூள், சாம்பார் பொடி, கறிப்பொடி போட்டு, மூடி 5 நிமிடம் கருகாமல் வேக விடவும்.
- 5
நன்கு சுருள வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, மேலே கொத்தமல்லி தழை, பெருங்காயத்தூள் சேர்த்து, அடுப்பை அணைத்து விடவும்.
- 6
பிறகு ஒன்று சேர கிளறினதும் இறக்கி விட்டு, தட்டிற்க்கு மாற்றவும்.
- 7
இப்போது, சுவையான, சுலபமான,சத்தான,*வெண்டைக்காய் ஸ்பைஸி பொரியல்* தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் விட்டும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.செய்து அசத்துங்கள்.
- 8
குறிப்பு:- தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். மேலும் சாம்பார் பொடி சேர்ப்பதால், வெண்டைக்காயின், கொழகொழப்புத் தன்மை குறையும்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட் (3)