ராகி கொள்ளு தோசை(ragi kollu dosai recipe in tamil)

#ku கொள்ளு,ராகி இரண்டிலும் இரும்பு,கால்சியம் இனும் பிற சத்துக்கள் உள்ளன.இருவரும்,உடல் எடைக் குறைப்பில் மிகுந்த பயன் தரக்கூடியவர்கள். இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி 8-10மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
8மணி நேரம் கழித்து,ஊற வைத்தவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து,தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 4
மாவை மிகவும் தண்ணீயாக கலக்காமல்,இட்லி பததிற்கே தயார் செய்து,8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 5
புளித்த மாவில், தோசைக்கு தேவையான அளவில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- 6
அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும், மெல்லியதாக விரித்து விடவும். எண்ணெய் சேர்க்காமலேயே மொறு மொறு மொறுப்பாக வரும்.
- 7
அவ்வளவுதான்.
சுவையான,சத்து நிறைந்த தோசை ரெடி.
தக்காளி,புதினா,மல்லி,தேங்காய் சட்னி,என எல்லா சட்னிகளும் பொருத்தமாக இருக்கும்.
Similar Recipes
More Recipes

கமெண்ட் (8)