மெந்தய கீரை காலிஃப்ளவர் பரோடா

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#lb
மெந்தய கீரை, காலிஃப்ளவர் சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 2 கப் கோதுமை மாவு
  2. ¼ கப் ஸ்பெல்ட் மாவு
  3. 1 மேஜை கரண்டி தேங்காய் மாவு
  4. உப்பு (விரும்பினால்)
  5. 1 கப் தயிர்
  6. 1 கப் காலிஃப்ளவர் நிராவியில் வேகவைத்தது
  7. 1 கப் மெந்தய கீரை, பொடியாக நறுக்கியது
  8. 1/4 கப் கடலை மாவு
  9. தேவையானஉருகிய வெண்ணை அல்லது நல்லெண்ணை
  10. பரோட்டா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  3. 3

    பரோட்டா மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் மாவு எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க,
    சிறிது சிறிதாக தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 15 அல்லது 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க
    வேகவைத்த காலிஃப்ளவர். மெந்தய கீரை, கடலை மாவு, சிறிது உப்பு சேர்த்து பிசைக.

  4. 4

    2 மேஜை கரண்டி எடுத்து உருண்டை – ஸ்டவ்விங் (stuffing or filling) செய்துகொள்ளுங்கள்ஓரு எலுமிச்சை பழம் அளவு சப்பாத்தி மாவு எடுத்து உருண்டைகள் செய்க. சப்பாத்தி குழிவியால் உருண்டையை தேய்த்து (புகைபடத்தில் இருப்பது போல),

  5. 5

    நடுவில் உருண்டை வைத்து ஓரங்களை ஒன்று சேர்த்து மூடுக.பில்லிங் பிதுங்கி மேலெ வராமல் இருக்க சிறிது மாவால் மூடி, மிகவும் ஜாக்கிரத்தையாக குழவியால் வட்டமாக செய்துகொள்ளுங்கள். மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை. இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள்

  6. 6

    ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. சிறுது உருகிய வெண்ணையோ அல்லது எண்ணையோ தடவிகொள்ளுங்கள். பரோட்டாவை ஸ்கில்லெட் மேல் சேர்க்க. மேலே சிறு குமிழ்கள் தெரியும். ஓரத்தை சிறிது தூக்கி பார்த்தால் கோல்டன் பிரவுன் ஆகி விட்டாதா என்று தெரியும். டிருப்பி போடுக. பரோட் டாவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக இருக்க வேண்டும். ஒரு பரோட்டா தயாராக 3 நிமிடம் ஆகலாம். நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது, பரிமாறும் தட்டிரக்கு மாற்றுக விரும்பினால் மேலே நெய் தடவுக.

  7. 7

    ருசித்துப் பார்க்க, ருசியான மணமான சத்தான பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
லக்ஷ்மி விசா உடனடியாக அனுப்பவும் எனக்கு.நான் விரைந்து வருகிறேன் சாப்பிட😊😋

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes