*மன்சோவ் சூப்*(manchow soup recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#CH
இந்தோ சைனா உணவில் மன்சோவ் சூப் முக்கிய இடத்தைப் பிடித்த ஒன்று. செய்வது மிகவும் சுலபம்.

*மன்சோவ் சூப்*(manchow soup recipe in tamil)

#CH
இந்தோ சைனா உணவில் மன்சோவ் சூப் முக்கிய இடத்தைப் பிடித்த ஒன்று. செய்வது மிகவும் சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. 1நூடுல்ஸ்(பெரிய பீஸ்)
  2. 1/4 பகுதிகோஸ்
  3. 1பெரிய சைஸ் கேரட்
  4. 2 டேபிள் ஸ்பூன்நறுக்கின செலரி
  5. சிறிதுசெலரி இலைகள்
  6. சோயா சாஸ் 2 ஸ்பூன்
  7. 2டீ ஸ்பூன்கருப்பு மிளகு தூள் (அ) வெள்ளை மிளகு தூள்
  8. 2 ஸ்பூன்சோள மாவு
  9. 1 ஸ்பூன்வினிகர்
  10. ருசிக்குஉப்பு
  11. 1 1/2 ஸ்பூன்எண்ணெய்
  12. அலங்கரிக்க:-
  13. நறுக்கின காய்கறிகள், செலரி இலைகள் சிறிது

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

  2. 2

    சோள மாவை பௌலில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், தண்ணீர், வினிகர் சேர்த்து நன்கு கொதித்ததும் நூடுல்ஸை சேர்க்கவும்.

  4. 4

    5 நிமிடம் வெந்ததும் வடிகட்டவும்.

  5. 5

    வடிகட்டியதும், சோளமாவில் நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

  6. 6

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நூடுல்ஸை பொரித்துக் கொள்ளவும்.

  7. 7

    பொரித்ததை வடிகூடையில் வடியவிடவும்.

  8. 8

    அடுப்பை ஹையில் வைத்து, கடாயில், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், செலரியை சிறிது வதக்கியதும்,கேரட், உப்பு போட்டு வதக்கவும்.

  9. 9

    அடுத்து கோஸ், சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

  10. 10

    தண்ணீர் சேர்த்து காய்கறிகள் சற்று வெந்ததும், கரைத்த சோள மாவு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

  11. 11

    பிறகு சோயா சாஸ் சேர்த்து திக்காக கொதித்து காய்கறி 3/4 பாகம் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.

  12. 12

    பிறகு பௌலுக்கு மாற்றி, மேலே பொரித்த நூடுல்ஸை போடவும்.

  13. 13

    இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*மன்சோவ் சூப்*தயார்.பிளேட்டை சுற்றி அலங்கரித்துக் கொள்ளவும். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

  14. 14

    குறிப்பு:- இந்த சூப் இந்தோ சைனா ஸ்பெஷல். வெள்ளை மிளகுத்தூள் இருந்தால் பயன் படுத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes