மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)

வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் காட்டியுள்ள அளவில் குண்டு மாங்காய் ஏழு அல்லது ஒன்றரை கிலோ குண்டு புளிப்பு மாங்காய் வாங்கிக் கொள்ளவும்.வர மிளகாய் வெந்தயம் கடுகு பெருங்காயத்தூள் உப்பு ஆகிய அனைத்தும் எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ள படி மாங்காயை அறிந்து வெயிலில் ஒரு வேட்டி துணியில் பரவலாக காயவிடவும். குறைந்தது வெயிலில் 4 டு 6 மணி நேரம் காய விடவும். அத்துடன் வரமிளகாய் கடுகு வெந்தயம், உப்பு அனைத்தையும் காய வைத்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் பொருட்களில் உள்ள ஈரப்பதம் காய்ந்து விடும். நீண்டநாட்கள் கெடாமல் இருக்கு
- 2
அனைத்தும் காய்ந்தவுடன் தனியாக எடுத்துக் கொள்ளவும்.. ஆறு டம்ளர் அரி ந்த காய்ந்த மாங்காய் துண்டுகளுக்கு ஒரு டம்ளர் அளவு உப்பு தேவைப்படும். உப்பை மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் காய்ந்த வரமிளகாயை நைஸாக அரைத்து முக்கால் டம்ளர் அல்லது ஒரு டம்ளர் அவரவர் விருப்பம் ஏற்ப எடுத்துக் கொள்ளவும். ஒரு கைப்பிடி அளவு மட்டும் கடுகு எடுத்துக் கொள்ளவும். மீதி தாளிக்க வேண்டும்.
- 3
குறிப்பு: காய்ந்த உப்பு வெந்தயம் கடுகு மிளகாய் ஆகிவிட்டதை வேண்டுமென்றால் லேசாக வெறும் வானலியில் வறுத்துக் கொள்ளலாம். மிளகாய் தூள் தங்களுடைய காரம் தேவைக்கேற்ப ஒன்று அல்லது முக்கால் டம்ளர் எடுத்துக் கொள்ளவும் போதுமான அளவு இது. நல்ல தரமான நல்லெண்ணையை பயன்படுத்துவோம். அதிக வெந்தயம் சேர்த்தால் லேசாக கசக்கும்.
- 4
அந்த கடுகுடன் நாலு டேபிள் ஸ்பூன் வெந்தயம் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் நல்லெண்ணெய் தரமானதாக எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் மாங்காய் துண்டுகளுடன் கலந்து கொள்ளவும். மாங்காய் லேசாக ஈரப்பதத்துடன் தான் இருக்கும் தவறு இல்லை. அனைத்தையும் ஒரு மரக் கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும். பிறகு மூடி வைக்கவும். ஒரு நாள் அப்படியே விட்டு விடவும்.
- 5
மறுநாள் பார்த்தால் மாங்காய் தண்ணீர் மற்றும் எண்ணெய் விட்டு இருக்கும். இப்போது மீதி அரை டம்ளர் எண்ணையை வாணலியில் ஊற்றி மீதி உள்ள கடுகு, பெருங்காயம் தாளித்து சூடாக ஊறுகாய் மேல் ஊற்றவும். நன்கு மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு மூடி வைக்கவும். அவை ஆறி யுடன் மாலை நேரம் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பீங்கான் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மட்டும் டேபில் வைத்துக் கொண்டு மீதியை குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
* ஆந்திரா சைடு ஆவக்காய்*(andhra avakkai pickle recipe in tamil)
இது மாங்காய் சீசன்.மாங்காயில், விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.அனைவரும் மிகவும் விரும்பக் கூடியது.எடையைக் குறைக்கவும், பசியை தூண்டும் உதவுகின்றது.வைட்டமின் சி உள்ளதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக Jegadhambal N -
-
-
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#pongal2022வீட்டில் தரமான பொருட்களை கொண்டு ஊறுகாய் செய்வது தான் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கடையில் வாங்கும் எந்த ஊறு காயிலும் பிரசர்வெட் டிஸ் சேர்த்து இருப்பார்கள். அது உடல் நலத்திற்கு கேடு. அதனால் வீட்டிலேயே மிகவும் குறைவான செலவில் ஆரோக்கியமான நல்ல ஊறுகாய்கள் செய்து கொள்ளலாம். கொஞ்சம் இதற்காக டைம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சீசனில் அந்தந்த ஊறுகாய் வகைகளை செய்து பீங்கான் ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.தேவையான அளவு ஊறுகாயை முதலில் ஒரு ஜாடியில் எடுத்துக் கொண்டு சாப்பிட டேபிளில் வைத்துக் கொள்ளவும். மீதியை ஒரு கண்ணாடி சீசாவில் பீங்கான் ஜாரில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். எவர்சில்வர் ஸ்பூன் போடுவதற்கு பதில் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்படுத்தவும். நீண்ட நாள் வரை கெடாமல் இருக்கும். வீட்டில் செய்யும் ஊறுகாய் ஆல் வயிற்றுப் பிரச்சனை அல்சர் தொந்தரவு வராது. Meena Ramesh -
ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)
ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.#birthday4 Renukabala -
தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்
அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது#everyday2 Rani Subramanian -
-
#தினசரி ரெசிபி2 மாங்காய் பருப்பு
சாதாரணமாக மாங்காயில் ஊறுகாய் போடுவார்கள் ஆனால் நான் செய்திருக்கும் மாங்காய் பருப்பை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி Jegadhambal N -
ஆவக்காய் ஊறுகாய்
#3m #3Mகோடையில் இதமான உணவு தயிர் சாதம். ஊறுகாயுடன் இணைந்தால் அது சிறந்த உணவாகிறது.தயார் செய்வோம் ஒரு பாரம்பரிய ஆவக்காய் ஊறுகாய் இன்று.ஆவக்காய் ஊறுகாய் என்பது மாங்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு வகை ஊறுகாய்.ஆவக்காய் தென்னிந்தியாவில் உணவுப் பொருட்களின் பிரதான உணவு. Sai's அறிவோம் வாருங்கள் -
சிம்பிள் மாங்காய் ஊறுகாய் (Simple maankaai oorukaai recipe in tamil)
மாங்காய் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.அதுவும் இது மாதிரி மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#mango Nithyakalyani Sahayaraj -
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana -
-
ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)
#HF *@Nalini_cuisine recipe,சகோதரி நளினி அவர்களது ரெசிபி. மாங்காய் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.மாங்காய் சாப்பிடுவதால் வியர்குரு வருவது தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
வடு மாங்காய் ஊறுகாய் (vadu mangai pickle)
#homeவடு மாங்காய் ஊறுகாயில் பதப்பொருள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இதில் ஆமணக்கு எண்ணை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை அதிக பாகுத்தன்மை உள்ளதால் மாங்காயில் உள்ள காற்று மற்றும் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. இது மிகவும் பிசுபிசுப்பு தன்மை கொண்டதால் மாங்காயில் நன்றாக உப்பை ஓட்டச்செய்து, தண்ணீரை மிக விரைவில் வெளியில் கொண்டு வருகிறது. இந்த எண்ணை உடம்பில் சூட்டைக்குறைத்து குளிரச்சி கொடுக்கிறது. Renukabala
கமெண்ட் (2)